இதத்தான் இவ்வளவு நாள் வச்சு உருட்டுனீங்களா?!.. விடாமுயற்சி அந்த ஹாலிவுட் படத்தோட காப்பியாம்!...

by ராம் சுதன் |

திரைப்படத்துறையில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் நலன் காக்கும் நடிகர்களில் முக்கிய நடிகராக கருதப்படுபவர் நடிகர் அஜித். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடந்த ஒன்றரை வருடமாக தயாரிப்பில் இருந்த விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போதுதான் அஜர்பைஜானில் நடந்து முடிந்தது.

அது சம்பந்தமான புகைப்படங்கள், வீடியோக்கள் என சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு அடுத்த படியாக இன்னும் 20 நாள்கள் மட்டும் படப்பிடிப்பு இருக்கின்றதாம். அது ஐதராபாத்தில் வரும் 29 ஆம் தேதியில் இருந்து நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். அதோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் விடாமுயற்சி படம் அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தை பற்றி இன்னொரு அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே இந்தப் படம் ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பி என்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதாவது தன் மனைவியை ஒரு கூட்டம் கடத்திக் கொண்டு போக அவர்களை பிடிக்க அஜித் செல்வது மாதிரியான கதை என்று சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது வந்த தகவலின் படி 1997 ஆம் ஆண்டு வெளியான ‘பிரேக் டவுன்’ என்ற ஆங்கில படத்தின் தழுவல்தான் விடாமுயற்சி படம் என்று உறுதியாகியிருக்கிறது. அதற்கான உரிமையையும் படக்குழு வாங்கிவிட்டதாம். இதை அறிந்ததில் இருந்து ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை இணையதளத்தில் கொட்டி வருகின்றனர்.

ஒரு ஆங்கில படத்தின் தழுவலை எடுக்கவா இவ்ளோ நாளாச்சு? இதுக்காடா இவ்ளோ போராட்டம் என நொந்து கொண்டு வருகின்றனர்.

Next Story