விடாமுயற்சி டிரெய்லரில் இதை எல்லாம் கவனிச்சீங்களா... அஜீத் டபுள் ஆக்டா?

by sankaran v |
விடாமுயற்சி டிரெய்லரில் இதை எல்லாம் கவனிச்சீங்களா... அஜீத் டபுள் ஆக்டா?
X

அஜீத் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் விரைவில் வெளிவரும் படம் விடாமுயற்சி. பிப்ரவரி 6ல் ரிலீஸ்னு அறிவித்து டிரெய்லரும் விட்டாங்க. மாஸான வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு என்ன சொல்றாருன்னு பாருங்க.

பக்கா அசால்ட்டு: பிப்ரவரி ஆறு. அஜீத் யாரு. தியேட்டர்ல போய் பாரு... அப்படிங்கற மாதிரி இருக்கு விடாமுயற்சி டிரெய்லர். ரசிகர்கள் துள்ளிக் குதிக்கலாம். ஹாலிவுட் படம் மாதிரி இருக்கு டிரெய்லர். என்ன மாஸ்..? என்ன லுக்கு? பெப்பர் எல்லாம் தூக்கிட்டாரு. ஒன்லி சால்ட். பக்கா அசால்ட்டுன்னு சொல்வாங்கள்ல அந்த மாதிரி.

அஜீத், அர்ஜூன், திரிஷா அதே காம்போ. அதனால இன்னொரு மங்காத்தாவா வர்றதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு என்கிறார் ஆஸ்கர் மூவீஸ் பாலாஜி பிரபு. வேறு என்னவெல்லாம் சொல்கிறார்னு பாருங்க.

ஃபேன்ஸ்சுக்கு ட்ரீட்டு: ஒரு பிரேம்ல மீசை இல்லாம வர்றாரு. இந்த மாதிரி அஜீத்தைப் பார்க்கறதுக்கு எத்தனை வருஷம் வேணாலும் காத்து இருக்கலாம். விடாமுயற்சி லேட்டு... விடாமுயற்சி லேட்டுன்னு சொன்னாங்க. இப்ப திறந்துருச்சு கேட். இனி அஜீத் ஃபேன்ஸ்சுக்கு எல்லாமே ட்ரீட்டுதான்.

அஜீத் இப்போ மாஸா வர்றாரு. டிரெண்டிங் இந்த டிரெய்லர்தான். வந்து 20 நிமிஷத்துல ஒரு லட்சத்துக்கு மேல லைக்ஸ், ஒன் மில்லியனுக்கு மேல வியூவ்ஸ். விடாமுயற்சி டிரெய்லர் பிரேக் டவுன்னு சொல்ற மாதிரி ஹாலிவுட் தரத்துல இருக்கு.

இப்ப பிரேக் டவுன் கம்பெனி காரங்க நஷ்ட ஈடு கேட்டுருக்காங்கள்ல என்னுடைய கதையைத் திருடிட்டன்னு. இப்ப இவங்க நஷ்ட ஈடு கேட்கலாம் நெஞ்சை நிமிர்த்திட்டு. ஏ என் தலய பார்த்தியா... என் தலயோட படத்துக்கா நஷ்ட ஈடு கேட்குறீங்க... நீங்க கொடுங்கடா இப்ப நஷ்ட ஈடு. பட்டையைக் கிளப்பும் பாருங்க படம்.

ஹாலிவுட் ஸ்டைல்: கேமரா சூப்பர். ஒவ்வொரு பிரேமும் கண்கொள்ளாக் காட்சி. லுக், படமே ஹாலிவுட் ஸ்டைல். இப்பவும் எப்பவும் யங் அஜீத் தான். மங்காத்தா, விடாமுயற்சி வேற வேற கதைதான். இதுல மனைவி திரிஷாவைக் கடத்திட்டுப் போறாங்க. அஜீத் வெளிநாட்டுல போய் தேடிக் கண்டுபிடிக்கிறது த்ரில்லிங்கா இருக்கு.

மகிழ்த்திருமேனி படத்துல நிறைய டீகோடிங் வச்சிருக்காரு. மனைவியைத் தேடி ஒரு இடத்துக்குப் போறாரு. அதுல 2 செகண்ட் ஒரு ஷாட் கட் பண்றாங்க. அதைப் பார்க்கும்போது அஜீத் மாதிரியே இருக்கு.

அஜீத் டயலாக்: அதுல ஏதோ மறைமுகமா சொல்ல வர்றாரு. அஜீத் டிவி ரிப்பேர் ஆச்சுன்னா, ரேடியோ ரிப்பேர் ஆச்சுன்னா சரிபண்ணத் தான் பார்ப்போமே தவிர தூக்கிப் போட பார்க்க மாட்டோம்னு டயலாக் சொல்றாரு. அது என்ன சொல்ல வருதுன்னா? ஒரு அண்ணனாகவோ, தம்பியாகவோ இன்னொரு அஜீத் இருக்கலாம்.

அவங்கள எப்படி மர்டர் பண்றது? வில்லனாகவே இருந்தாலும் மன்னிச்சி சரிபண்ணனும். அப்படிங்கற மாதிரி நல்ல மெசேஜ் இருக்குற மாதிரி தெரியுது. இந்தப் படம் ரெட்டைத்தல மாதிரி தான் இருக்கும். கடைசில அஜீத் தேடிப் போறாரு.

ட்ரெண்டிங் அனிருத்: அந்தப் பில்டிங். ஹாலிவுட் தரத்துல பரபரப்பாகப் போகுது. கோலிவுட்ல ஹாலிவுட் ஹீரோ யாருன்னா அது அஜீத் தான். இன்னைக்கு ட்ரெண்டிங் அனிருத் தான். கமல், ரஜினி, விஜய்னு எந்தப் படம் வந்தாலும் அவருதான். அதனால இந்தப் படத்துக்கும் பெரிய பிளஸ் அவருதான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story