Vijay TVK 26: விஜய் போட்ட 26 அதிரடி தீர்மானங்கள்.... இனி தான் அரசியலே களைகட்டப் போகுது..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:46  )

தமிழக வெற்றிக்கழக கட்சியைத் தொடங்கி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் விஜய். இதற்குப் பல்வேறு பாராட்டுகளும், கண்டனங்களும் வந்தன. இதன்பிறகு விஜய் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக செயற்குழுவைக் கூட்டியுள்ளார். அதில் விஜய் கொண்டு வந்த அதிரடி தீர்மானங்கள் தான் இவை. என்னென்னன்னு பாருங்க.

26 தீர்மானங்கள்: திமுகவை கண்டித்து எதிர்ப்பும் விமர்சனமும் கொடுக்கப்பட்டுள்ளது. மாநாடு நடந்து முடிந்த பிறகு அடுத்தக்கட்ட நகர்வு பற்றி விவாதிக்க தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. மின்கட்டணம் உயர்வைக் குறைக்க வேண்டும். அதற்கான முறையை மாற்றி அமைக்க வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மதுக்கடைகளைக் கால நிர்ணயம் செய்து மூட வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சட்ட ஒழுங்கு சீர்கேட்டையும் மாநில அரசுக்கு எதிராக முன்வைத்துள்ளார். மாநாட்டில் நிறைவேற்ற முடியாத தீர்மானங்களை இந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சில மாநிலங்களில் மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது, மத்திய அரசைக் காரணம் காட்டி சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருக்கும் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஈழத்தமிழர்கள் உரிமையைப் பாதுகாக்கும் தீர்மானம், இலங்கைக்கான இந்தியத் தூதராக தமிழரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தத் தீர்மானத்திலும் திமுக, பிஜேபி தான் அவர் தனது எதிரியாக சுட்டிக்காட்டியுள்ளார்.

விஜயை ட்ரோல் செய்து சமீபகாலமாக பல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் கடுமையாகச் சாடியுள்ளார். இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இனி விஜய் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனமாக இருக்க வேண்டும். அப்போது தான் வெற்றியின் பாதையை நோக்கி அவர் செல்ல முடியும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story