வேட்டையனை வெறுப்பேற்றும் விஜய்!.. அர்ச்சனாவுடன் கேக் வெட்டி கொண்டாடுறாரே.. கோட் வெற்றி விழா இல்லையா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:04  )

ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வெற்றியைப் பெற்ற நிலையில் அர்ச்சனா கல்பாத்தி உடன் இணைந்து தளபதி விஜய் கேக் வெட்டி கொண்டாடி உள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, யோகி பாபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்த கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியானது.

கோட் திரைப்படம் அதிகபட்சமாக 455 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் வெளியிட்டார். இந்நிலையில் கோட் திரைப்படம் தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாய் ஷேர் பெற்றிருப்பதால் அந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக விஜயுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் ஏற்கனவே விஜய் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் சண்டை போட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களை மேலும் வெறுப்பேற்றும் விதமாக விஜய் இப்படி எல்லாம் செய்கிறாரா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

கோட் படத்தின் வெற்றியை மிகப்பெரிய விழாவாக நடத்தி விஜய் கொண்டாட வேண்டும் என்றும் வெறும் கேக் வெட்டி கொண்டாடியது உடன் நிறுத்தக் கூடாது என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கோர்ட் படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யாரையும் காணவில்லையே என்கிற கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

நடிகர் விஜய் அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் வசூல் நிச்சயம் ஆயிரம் கோடி ரூபாயை தொடும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Next Story