பணத்தால ஒரு பிரயோஜனமும் இல்ல… விஜய் ஆண்டனி சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க..!

Published on: March 18, 2025
---Advertisement---

நடிகர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர் விஜய் ஆண்டனி. இவர் தனது திரைப்படங்களில் பெரும்பாலும் பணத்திற்கு எதிரான கருத்துகளையே முன்வைத்து வருகிறார். இவரது படத்தின் பெயர் கூட பிச்சைக்காரன் தான். அதன் வெற்றி இரு பாகங்களைத் தயாரிக்க வைத்து விட்டது. படத்தில் அவ்வளவு சென்டிமென்ட் காட்சிகளும் ரசிக்க வைக்கும் விதத்தில் எடுத்து ஹிட் கொடுத்து விட்டார்.

2016ல் வெளியான படம் பிச்சைக்காரன். இது விஜய் ஆண்டனியின் சொந்தப்படம். இயக்கியவர் சசி. படத்தில் விஜய் ஆண்டனி, சட்னா தித்டசு, பகவதி பெருமாள், முத்துராமன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் இசை அமைப்பாளரும் விஜய் ஆண்டனிதான்.

இந்தப் படத்தில் கிளைமாக்ஸ்ல ஒரு டயலாக் வரும். ‘நான் எத்தனையோ நாள் பிச்சைக்காரனா இருந்திருக்கேன். அதுக்காக வருத்தப்பட்டதில்ல. ஆனா பணக்காரனா இருப்பதுக்கு இந்த நிமிஷம் வேதனைப்படுறேன்’ என வரும்.

pichaikaran 2

pichaikaran 2

2023ல் விஜய் ஆண்டனி தயாரித்து இயக்கி, இசை அமைத்து நடித்த படம் பிச்சைக்காரன் 2. இந்தப் படத்தில் கதாநாயகியாக காவ்யா தாபர் நடித்துள்ளார். யோகிபாபு, ராதாரவி, மன்சூர் அலிகான், ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலரும் நடித்துள்ளனர்.

விஜய் ஆண்டனியைப் பொருத்தவரை பிச்சைக்காரன் 2 படத்தில் ‘ஆண்டி பிகிலி’ன்னு ஒரு வார்த்தையைப் பயன்படுத்தி மோசமான பணக்காரர்களைத் திட்டி இருந்தார். படத்தில் பல இடங்களில் லாஜிக் மீறல் இருந்ததால் முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பு இதற்குக் கிடைக்கவில்லை.

30 கோடி பட்ஜெட்டில் உருவான படம் 25 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தெரிகிறது. தற்போது வாழ்க்கையில் ஒரு மனுஷனுக்கு பணம் எந்த நேரத்தில் பிரயோஜனம் இல்லாமல் போகிறது என்று தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

ஒரு மனுஷனுக்கு காசு இருக்கோ பணம் இருக்கோ, குடும்பம் பலமா இருந்தா அதுவே போதும். எவ்ளோ பணம் பொருள் இருந்தாலும், சிலருக்கு குடும்பம் இருக்காது. நல்ல பந்தம் இருக்காது. அன்பான மனைவி இருக்க மாட்டாங்க. அண்ணன் தம்பி பாசம் இருக்காது. சொத்தைப் பங்கு போடுறதுல குறியா இருப்பாங்க.

இந்த காலத்துல அந்த வேல்யு தெரியாது. பணம் பணம்னு லைஃப்ல ஓடிட்டு இருப்போம். பேம்லி தான் பர்ஸ்ட் பேஸ். அதனால பணம் யாருக்கும் நிரந்தம் இல்ல. 70, 80 வயசுக்கு அப்புறம் பணம் பிரயோஜனம் கிடையாது. குடும்பம், அக்கம் பக்கம் இருக்குறவங்க அன்பு தான் நம்மள சந்தோஷமா வச்சிக்கும் என்கிறார் விஜய் ஆண்டனி.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment