Categories: latest news

விஜய் கொடுக்கப் போகும் குடைச்சல்.. பலி ஆடா மாறப்போகும் எச்.வினோத்

தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுலா பயணம் போகப்போகிறார் என்ற ஒரு செய்தி வெளியானது. அது எப்போது இருந்து ஆரம்பிக்கப் போகிறார் என்பது பற்றி வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருக்கிறார். ஏற்கனவே அவர் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே இப்படி ஒரு திட்டத்தில் இருந்தார். இரண்டு கட்டமாக அந்த சுற்று பயணம் இருக்கும் .சில மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு பயணம், அதன் பிறகு எஞ்சிய மாவட்டங்களில் அவருடைய பயணம் என்பதுதான் அவருடைய திட்டமாக இருந்தது. அதுவும் ஒரு பொதுக்கூட்டம் பிரஸ் மீட்டிங் என்று இல்லாமல் திறந்த வெளியில் ஒரு ஊரின் முக்கியமான பகுதிகளில் மட்டும் மக்களை சந்திக்கும் மாதிரியான ஒரு திட்டத்தில் இருந்தார் விஜய்.

ஆனால் இப்போது இந்த ஜனநாயகன் படப்பிடிப்புனாலதான் அவரால் சரியாக பிளான் பண்ண முடியவில்லை. கல்வி விருது வழங்கும் விழா முடிந்த பிறகு தான் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இனிமேல் அவருக்கு நேரமில்லை .அடுத்து மார்ச் ஏப்ரல் இந்த மாதங்களில் தேர்தல் பரபரப்பு அதிகமாகவே இருக்கும். அதனால் அதற்கு முன்பாகவே இந்த விஷயங்களை எல்லாம் பண்ண வேண்டிய தேவை இருக்கிறதால் இனிமேல் விஜய் நாட்களை வீணடிக்க மாட்டார் .

ஜனநாயகன் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் அது பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக் என்று சொல்கிறார்கள். ஆனால் பகவந்த் கேசரி திரைப்படம் பக்கா ஒரு கமர்ஷியல் திரைப்படம் .அதனால் அது அரசியல் படமாக இருக்காது என்ற ஒரு செய்தி வெளியானது .சமீப காலமாக ஆளுங்கட்சிக்கு எதிராக விஜய்யும் பல விஷயங்களை பேசி வருகிறார். அதனால் படத்திலும் இந்த மாதிரி விஷயங்களை சேர்க்க வேண்டும் என வினோத்திடம் விஜய் சொல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற ஒரு தகவலும் வெளியாகி வருகிறது. அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் பகவந்த் கேசரி என்பது வெறும் மசாலா திரைப்படம் தான் .

விஜயை பொறுத்தவரைக்கும் நாம் நடிக்கிற கடைசி படம் தோல்வி படமாக இருக்கக் கூடாது. அது வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்க வேண்டும். அப்படி வெற்றி படமாக இருக்க வேண்டும் என்றால் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய மசாலா படமாக இருக்க வேண்டும் என நினைத்தார் விஜய். அதனால்தான் அந்த படத்தை தேர்வு செய்தார். அதே நேரத்தில் அரசியலுக்கும் வந்தாகி விட்டதும் .எச் வினோத்தும் சமூகப் பொறுப்பில் உள்ள ஒரு சமூக அரசியல் தெரிந்த ஒரு இயக்குனர். அதனால் இந்த படத்தை ஏன் வெறும் மசாலா படமாக பண்ண வேண்டும் .ஒரு அரசியல் கலந்த படமாக பண்ணக்கூடாது என்ற ஒரு விவாதமும் வந்திருக்கலாம்.

அவர் ஏற்கனவே கமலை வைத்து ஒரு படத்தை எடுப்பதாக இருந்தது .கமல் அரசியல் ரீதியாக தனக்கான ஒரு விஷயங்களை அந்த படத்தில் சேர்ப்பதாக இருந்தார். அதனால் அந்த விஷயங்களை எல்லாம் இந்த படத்திற்குள் கொண்டு வருகிறார். விஜய்க்கு ஏற்ப அதில் மாற்றமும் கொண்டு வருகிறார். அதனால் அப்படி நகரும் பொழுது கிட்டத்தட்ட இந்த படம் பாதி அரசியல் படமாகவே மாறப்போகிறது. ஏற்கனவே இந்த படத்தில் ஒரு போர்ஷன் மட்டும் அரசியல் இருக்கிறது என்று தான் சொன்னார்கள். ஆனால் ஜனநாயகன் என்ற ஒரு தலைப்பு அப்புறம் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு திமுக விஜய்க்கு கொடுக்கிற நெருக்கடி இதெல்லாம் சேர்த்து விஜய்க்கு ஒரு கடுப்பை ஏற்படுத்தி இருக்கும்.

அதனால் இந்த படத்தின் மூலமாக திமுகவுக்கு ஒரு குடைச்சல் கொடுப்போம் என முடிவெடுத்திருக்கலாம். அதன் காரணமாக இந்த படம் பாதி பொலிடிக்கல் படமாக மாறி இருக்கும் என பிஸ்மி அவருடைய கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் ஜனநாயகன் ஒரு அரசியல் படமாக அமையும் பட்சத்தில் எச் வினோத்துக்கு ஏதாவது பிரச்சனை வருமா என்ற நோக்கிலும் பார்க்கும் பொழுது உதயநிதிக்கு நன்றாக தெரிந்திருக்கும் இது முழுக்க முழுக்க விஜய் சொல்லி தான் இந்த மாதிரி படம் எடுத்திருக்கிறார் என்று. அதனால் இதற்கும் எச்.வினோத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்றுதான் நான் நினைக்கிறேன் எனவும் பிஸ்மி கூறி இருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

8 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

10 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

10 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

11 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

11 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

18 hours ago