விஜய்க்கு அந்த விஷயத்தில் அஜீத் கைகொடுப்பாரா? ரெண்டு பேரோட எதிரி யார்? தரமான சம்பவம் லோடிங்...
அக்டோபர் 27 (நாளை ) விக்கிரவாண்டி 'வி' சாலையே திணறப்போகிறது. அந்தளவுக்கு மாநாடு பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இப்போதே படையெடுக்கத் தொடங்கி விட்டனர். இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சொல்லும் தகவல்கள்...
கள்ளழகர் திருவிழா மாதிரி ஒரு பெரிய சம்பவத்தை விக்கிரவாண்டியில விஜய் நடத்தப் போறாரு. பல இடங்களில் இருந்து தானாகவே கூட்டம் வண்டி வண்டியாக வந்துக்கிட்டு இருக்கு. பல லட்சக்கணக்கான மக்கள் திரள ஆரம்பிச்சிட்டாங்க. எனக்குத் தெரிஞ்சி பணம் வாங்காமல் சீமானைத் தவிர வருகிற கூட்டம் இதுதான்.
வெளியூர்களில் இருந்து மக்கள் தங்குவதற்கு எங்கும் இடம் கிடையாது. சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய அத்தனை இடங்களும் புக்கிங் ஆகி விட்டது. ரொம்ப நாளைக்கு முன்னாடி ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டத்துக்கு அப்படி ஒரு கூட்டம் கூடியது.
அதைவிட பல மடங்கு இங்கு வந்து கொண்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் அசம்பாவிதம் வந்துவிடக்கூடாது என்பதற்காக விஜய் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், குழந்தைகள் வர வேண்டாம் என்று முதலிலேயே தெரிவித்துள்ளார்.
வரும் கூட்டத்தை அவர் வாக்காக மாற்ற வேண்டும் என்பது தான் விஜயின் வேலை. மேடையில் விஜய் பேசுறது 45 நிமிடம் தான் அதிகபட்சமாக இருக்கும். தன்னோட மிஷன் என்ன? நாம எங்கே போறோம்? இனி நமது அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னன்னு தான் பேசுவாரு.
சமீபகாலமாக சீமான் பெரியாரைப் பற்றி விமர்சிக்கிறார். ஆனால் இங்கு விஜய் பெரியார் கட்அவுட்டும் வைத்து இருப்பதால் நாம் தமிழர் கட்சி மற்றும் பிஜேபியுடன் கூட்டணி வைக்காது என்றே நம்பலாம்.
பாதுகாப்பு நடவடிக்கைகளில் ரொம்பவே கவனம் செலுத்தி இருக்கிறார் விஜய். துபாயில் இருந்து பயிற்சி பெற்ற தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தையேக் கொண்டு வந்து இறக்கியுள்ளார்.
சமூகவிரோதிகளால் இடையூறு வராதவாறு மிகக் கவனத்துடன் செயல்பட இருக்கிறார்கள். உலகத் தமிழர்கள் மொத்த பேரின் பார்வையும் இன்று விக்கிரவாண்டி மாநாட்டில் தான் இருக்கு. இதை விஜய் சிறப்பாகச் செய்து முடிப்பார் என்றும் தெரிகிறது. விஜய், அஜீத் இணைந்த மாதிரியான பல பேனர்களை ரசிகர்களே வைத்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும் இந்த வீடியோவில் அந்தனன் தெரிவித்துள்ளார்.
மேலும் அஜீத் மாநாட்டுக்கு வாழ்த்து அனுப்புவாரா என்பதற்கும் இப்படி பதில் சொல்லி இருக்கிறார். அதிமுக, திமுக என இரு கட்சிகளுமே அவரவர்கள் ஆட்சியில் இருந்த போது விஜயின் படங்களுக்குக் குடைச்சல் கொடுத்துருக்காங்க. அதன் விளைவு தான் விஜயை அரசியல் வரத் தூண்டியுள்ளது.
அதே சூழல் அஜீத்துக்கும் ஏற்பட்டுள்ளது. அவருக்கும், விஜய்க்குமான பொது எதிரி அரசியல்ல இருக்காரு. இருவருக்குமான பொது எதிரியை சந்திக்கக்கூடிய சரியான வேளையாக அஜீத் நினைக்கக்கூடும். அப்படி அவர் நினைத்தால் கண்டிப்பாக அவரிடம் இருந்து வாழ்த்துக் கடிதம் வரும் என்கிறார் வலைப்பேச்சு அந்தனன்.