இப்படி பண்ணா யார் ஓட்டுப் போடுவா? அரசியலில் விஜய்க்கு வந்த ஆபத்து.. கரெக்ட்தான்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:18  )

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். விஜயின் படங்களுக்கு என நல்ல ஒரு ஒப்பனிங் இருந்து வருகிறது. சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே தக்க வைத்திருக்கிறார் விஜய். ஒரு மாபெரும் ஆளுமையாக சினிமாவில் அறியப்படும் விஜய் அடுத்து அரசியலிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த விரும்புகிறார்.

பல கோடிகளில் சம்பளம், பல்லாயிரக்கணக்கான ரசிகர் பட்டாளம் என பீக்கில் இருக்கும் போதே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருகிறார். அதற்கு காரணம் மக்களுக்காக ஏதாவது ஒரு வகையில் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான். அதன் முன்னெடுப்பாக மாணவ மாணவியர்களுக்கு தேவையான கல்வி உதவி தொகை, ஊக்கத்தொகை என அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தேவையான பரிசுத்தொகையை வழங்கினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணத்தொகையையும் வழங்கினார். இப்படி படிப்படியாக மக்களின் மனதில் இடம்பிடிக்க என்னெல்லாம் செய்யவேண்டுமோ செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அஜித் , ரஜினி, சூர்யா இவர்களின் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டால் அது விஜயின் அரசியலுக்கு ஒருவிதத்தில் ப்ளஸாக இருக்கும்.

அதனால் கூடிய சீக்கிரம் ரஜினியை போய் சந்திப்பார் விஜய் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றது. அதனால் கூட வேட்டையன் படத்தை விஜய் பார்த்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.இந்த நிலையில் ரஜினி ரசிகர் ஒருவர் இன்று விஜயை பற்றியும் அவருடைய ரசிகர்களை பற்றியும் ஆதங்கத்தில் பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது.

அதாவது விஜய் ரசிகர்கள் வேட்டையன் படத்தை பற்றியும் ரஜினியை பற்றியும் அவதூறாக பேசி வருகிறார்கள். இப்படி விஜய் ரசிகர்கள் செய்வது விஜய் அரசியலுக்குத்தான் ஆபத்து என கூறியிருக்கிறார். எங்களை பொறுத்தவரைக்கும் மாதா , பிதா , குரு இவர்களுக்கு அடுத்த படியாக தலைவரைத்தான் நினைத்து வருகிறோம். பெற்றோர்களை தவறாக பேசினால் யாரும் சும்மா இருப்பார்களா?

அதை போலத்தான் தலைவரை பற்றி தப்பா பேசினா பொறுத்துக் கொள்ள முடியாது. கண்டிப்பாக விஜய்க்கு நாங்கள் ஓட்டுப் போடமாட்டோம் என அந்த ரஜினி ரசிகர் கூறினார்.

Next Story