விஜய் மாநாட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் சொன்ன கருத்து... வாழ்த்தா, விமர்சனமா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:05  )

விஜய் நடத்தும் முதல் மாநாடு இன்னும் சற்று நேரத்தில் கோலாகலமாகத் துவங்க உள்ளது.

முதல் அரசியல் மாநாட்டில் அம்பேத்கார், பெரியார், காமராஜர், அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார் என பல பெரிய தலைவர்களையும், சுதந்திரப் போராட்ட வீரர்களையும் கட்சியின் சிக்னல்களாக கட்அவுட்டில் வைத்து இருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அதுபற்றி பலரும் விவாதித்து வருகின்றனர். இது வாக்கு வங்கிகளுக்கான வழிகாட்டுதலால் வைக்கப்பட்டதா என்றும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

காமராஜர், அம்பேத்கார், பெரியாரையும் படிக்கணும்னு விசிக கட்சி வலியுறுத்துகிறது. அதே போல பெரியார் படம் வைத்ததால் இடது சாரிகளை டச் பண்ணுவதாக உள்ளது. காமராஜர் நாடார் சமுதாயத்தினரைக் கவர்கிறது.

வேலு நாச்சியார் தேவர் சமுதாயத்தையும், அஞ்சலையம்மாள் வன்னியர் சமுதாய மக்களையும் டச் பண்ணகிறது. அது மட்டுமல்லாமல் சேர சோழ பாண்டிய மன்னர்களும் இருப்பதால் தமிழகம் முழுவதும் கணிசமான வாக்குவங்கியை அபகரிக்கும் என்றே தெரிகிறது. இதை வைத்துப் பார்க்கும் போது மைய இடது சாரி பாலிசியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

விஜயின் மாநாட்டுக்கு பிரபு, விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தற்போது துணைமுதல்வர் ஸ்டாலினும் கருத்து தெரிவித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார். ஆனால் ஒரு இடத்தில் செக் வைத்துள்ளார். என்னன்னு பாருங்க.

நண்பர் விஜய் எனது நீண்ட கால நண்பர். எனது முதல் படமே விஜய் படம் தான். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மக்கள் ஏற்பது தான் முக்கியம். அவரது புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் விஜய் மாநாடு குறித்து கேள்வி கேட்கும்போது அவரது பதிலில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்ததையும் பார்க்க முடிந்தது. 18 வயதில் சினிமாவில் நுழைந்த விஜய் 50 வயதில் அரசியலில் நுழைந்து முதல் மாநாட்டிலேயே கட்டுக்கடங்காத அளவில் கூட்டத்தைத் திரட்டியுள்ளது பெரும் பேசுபொருளாகப் பார்க்கப்படுகிறது.

Next Story