வயித்தெரிச்சலில் பிரபுதேவா! வாய்ப்பை பிடுங்கிய தளபதி விஜய்.. சூப்பர்ஹிட் படத்தை ஆட்டைய போட்டுட்டாரே!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:32  )

Vijay: பொதுவாக நடிகர் விஜய் தான் ஹிட் இயக்குனர்களை உருவாக்குவார் என்ற பேச்சு கோலிவுட்டில் இருக்கிறது. ஆனால் அவர் பிரபுதேவாவிற்கு உருவாக்கப்பட்டிருந்த சூப்பர் ஹிட் திரைப்படத்தை கட்டி பிடுங்கிய சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இருவரும் கொடி கட்டி பறந்து வந்த சமயம். இருவருக்குமே அந்த சமயத்தில் மிகப்பெரிய ஹிட் படம் ஒன்று தேவைப்பட்டது. அதில் நடிகர் அஜித் இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வாலி படத்தில் நடித்து அதை சூப்பர் ஹிட் ஆகவும் மாற்றி விட்டார்.

இந்த சமயத்தில் எஸ் ஜே சூர்யா தன்னுடைய அடுத்த படமாக பிரபுதேவாவிற்கு ஒரு கதையை தயார் செய்து வைத்திருக்கிறார். ஆனால் தளபதி விஜய்க்கு எஸ் ஜே சூர்யாவுடன் படம் செய்ய வேண்டும் என ஆர்வம் இருந்ததாம். இதை பிரபல தயாரிப்பாளர் பி எல் தேனப்பனிடம் கூறி சூர்யாவிடம் பேசக்கூடியிருக்கிறார்.

ஆனால் அவரோ ஏ எம் ரத்தினம் தயாரிப்பில் பிரபுதேவாவை வைத்து அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறுவிடுகிறார். இருந்தும் தேனப்பன் விஜய் சூர்யாவுடன் இணைய ஆர்வம் காட்டி வருவதாக பேசிவிட்டு விடுமுறைக்காக வெளிநாடு சென்று விடுகிறார்.

ஆனால் 30 நாள் கழித்து அவர் வந்து பார்க்கும்போது அதை காம்பினேஷனில் பிரபுதேவாவிற்கு பதில் ஏ.எம் ரத்தினம் தயாரிப்பில் எஸ் ஏ சூர்யா இயக்கத்தில் விஜய் குஷி திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்புகள் வந்திருக்கிறது. ஆனால் அது அதே கதைதானா என தெரியாது என்பதையும் தேனப்பன் தெரிவித்து இருக்கிறார்.

விஜயின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றி படமாக குஷி அமைந்தது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story