Categories: latest news

விஜய் அந்த விஷயத்துல உஷாரா ஆகிட்டாரு… தனுஷ் எப்படி கோட்டை விட்டாரு?

தனுஷ் சமீபத்தில் குபேர டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஒரு செங்கலைக் கூட பிடுங்க முடியாதுன்னு சொன்னார். அதுக்கு என்ன அர்த்தம்? அந்த செங்கலை யார் உருவுனதுன்னு பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சொல்கிறார். என்னன்னு பாருங்க.

தனுஷ் ஒரு செங்கலைக் கூட உருவ முடியாதுன்னு பேசினார். அதுக்கு அர்த்தம் என்னன்னா என்னை வந்து கீழே இழுத்துற முடியாது. நான் மேல் நோக்கிப் போய்க்கிட்டே இருப்பேன். என்னோட தன்னம்பிக்கை அப்படியானதுன்னு சொல்ல வர்றாரு. என்னோட ரசிகர்கள் தீப்பந்தமா வந்து எனக்கு வழி காட்டுறாங்க. கண்ணுக்குத் தெரியாத கரம் வந்து என்னைக் கைபிடிச்சிக் கூட்டிட்டுப் போகுதுன்னு எல்லாம் சொன்னாரு. ஆனா செங்கலை உருவுனது யாருங்கற கேள்விதான் பயங்கரமா இருக்கு.

செங்கலை உருவுறதுக்கு முயற்சி பண்ணி இருந்தா தானே அந்த வார்த்தையைப் பயன்படுத்திருக்க முடியும்? அந்த செங்கலை உருவுனதுதான் இவங்க எல்லாம்னு நயன்தாரா, சிவகார்த்திகேயன், சுசித்ராவை எல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.

தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணைந்து குபேரா என்ற படத்தில் நடித்தார். இதோட நீளம்தான் பெரிசா இருந்தது. நிறைய விஷயங்களை இதுல சொல்றாங்க. ஒரு ஹீரோ தொடர்ந்து தோத்துக்கிட்டு இருக்குறதை விரும்ப மாட்டோம். முக்கியமா தமிழ் சினிமா ஹீரோ ஜெயிக்கணும். இன்டர்வலுக்குப் பிறகாவது அடிச்சி நொறுக்குனா தான் நாம ரசிப்போம்.

ஆனா குபேரா படம் அப்படி அமையல. பிற மாநில இயக்குனர்களைப் பார்த்து அஞ்சக்கூடிய சூழலை சேகர் கம்முலா உருவாக்கி விட்டார். கமல் வித விதமா நடிச்சி ஒரு ஃபார்முலாவை உருவாக்கிட்டாரு. அவர் சப்பாணியா நடிச்சாலும் ஏத்துக்க முடியும். சகலகலா வல்லவனா நடிச்சாலும் ஏத்துக்க முடியும். நடிப்பைத் தாண்டி ஒரு ஹீரோயிசம் இங்கே இருக்கணும். நடிப்பு என்பது அழுது புளியறது மட்டுமல்ல. தெலுங்கு இயக்குனருக்கு தமிழர்களின் ரசனை எப்படி புரியாமப்போச்சுன்னு தெரியல. உண்மையிலேயே தனுஷின் செங்கலை உருவுனது சேகர் கம்முலா தான்.

வாரிசு படத்தை வம்சிங்கற தெலுங்கு இயக்குனர் எடுத்தாரு. ஆனா படம் அவரு நினைச்ச மாதிரி இல்லை. டிவி சீரியல் மாதிரி இருக்குன்னு படத்துலயே விஜய் சொல்வாரு. அதுக்கு அப்புறம் கோபிசந்த் என்ற தெலுங்கு இயக்குனரை வைத்துப் படம் எடுக்கச் சொன்னாங்க. விஜய் உஷாராகி தமிழ் பட இயக்குனர்களை வைத்தே எடுத்துக்குறேன்னு சொல்லிட்டாராம். அந்த வகையில தனுஷ் ஏன் கோட்டை விட்டாருன்னு தெரியல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

5 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

6 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

7 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

8 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

8 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

14 hours ago