சொத்தை விற்கும் நிலைக்கு சென்ற தளபதி.. ஒரே முடிவால் இத்தனை கஷ்டமா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:30  )

Vijay: நடிகர் விஜய் தன்னுடைய சொத்துக்களை விட்டு இருப்பதாக பிரபல திரை விமர்சகர் அந்தணன் தெரிவித்திருக்கும் வீடியோ குறித்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இருந்து தளபதி 69 திரைப்படத்துடன் வெளியேற இருப்பதாக இந்த வருடத்தின் தொடக்கத்தில் அறிவித்திருந்தார். தன்னுடைய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தையும் அறிவித்தார்.

இதனால் விஜயின் சினிமா கேரியரில் கடைசி படமாக கோட் மற்றும் தளபதி 69 அமைந்திருக்கிறது. இதில் கோத் திரைப்படம் நல்ல வசூலை குவித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த படங்களுக்கு முன்னர் வெளியான லியோ திரைப்படம் குறித்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

லியோ திரைப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனத்தை சேர்ந்த லலித் தயாரித்திருந்தார். இது விஜய்க்கு நெருக்கமான நிறுவனம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தை உண்மையான வசூல் அந்த நிறுவனத்திற்கு நஷ்டமாகவே அமைந்தது.

இதனால் அந்த கடனை அடைக்க நடிகர் விஜய் தன்னுடைய மண்டபங்களை லலித்திடமே விற்று விட்டதாக அந்தணன் தெரிவித்து இருக்கிறார். முதலில் விஜய் இடம் கால்ஷீட் கேட்டு வந்த லலித் அவருடைய மண்டபங்களை பராமரித்து வந்தார். தற்போது அதையே அவர் வாங்கி விட்டதாக தகவல்கள் வருகிறது. இனிமேல் விஜயிடம் மண்டபங்களை இல்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story