சயின்ஸ் மட்டும் தான் மாறணுமா? மாற வேண்டியது அரசியல்... பொளந்து கட்டிய விஜய்
தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்த விஜய் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் மாஸ் காட்டியுள்ளார். முதல் மாநாட்டிலேயே அதுவும் அரசியலில் இது தான் இவருக்குக் கன்னிப்பேச்சு. ஆனால் மெய்சிலிர்க்க வைத்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். அப்படி என்ன சொன்னாருன்னு பார்க்கலாமா...
குழந்தையைப் போல உணர்கிறேன். பாம்பு தான் அரசியல். அதுக்கு நாம குழந்தை தான். ஆனா பாம்பா இருந்தா கூட எனக்குப் பயமில்லை. பாம்பைப் பிடித்து விளையாட ஆரம்பிச்சிருக்கேன்.
சீரியஸோடு கொஞ்சம் சரிப்பையும் கலந்து போறது தான் நம்ம ரூட்டு. எதுக்கு இந்த அவர்களே அவர்களே.... பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பேசிட்டு எதுக்குங்க இந்த அவர்களே.... இதுல யாரு மேல... யாரு கீழன்னுலாம் கிடையாது. எல்லாருக்கும் என்னோட உயிர் வணக்கங்கள்.
இந்த அரசியல்னாலே கோபமா கொந்தளிச்சா புரட்சிப் பண்ண வந்தவங்கன்னு ஒரு கான்செப்ட் இருந்தது. நமக்கு எதுக்குங்க அதெல்லாம். சொல்ல வந்ததை சுவீட்டா சொல்லிட்டுப் போயிடணும்.
சயின்ஸ் மட்டும் தான் மாறணுமா... மாற வேண்டியது அரசியலும் தான். ஆல்ரெடி இருக்குற அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசி டைம் வேஸ்ட் பண்ணப் போறதும் இல்லை. அதுக்காக மொத்தமா கண்ணை மூடிக்கிட்டு இருக்கப் போறதுமில்லை.
இப்ப என்ன வேலை? அதை எப்படி தீர்த்து வைக்கிறது? அரசியல்ல நம்பிக்கை தர்றது கொள்கைக் கோட்பாடுகள் தானே. அதை யாருக்கிட்ட இருந்து எடுத்து அப்ளை பண்ணப் போறோம் என்பது நம்ம சொல்ல வேண்டிய கடமை இல்லையா...
அரசியலில் விஜய் இதுவரை பேசியது இல்லையே... அவரால 10 வார்த்தையை சேர்ந்தாப்புல பேசவே திணறுவாருன்னு எல்லாம் சோஷியல் மீடியாவுல விமர்சனம் பண்ணினாங்க. ஆனால் முதல் மாநாட்டிலேயே அனைத்துக் கட்சியினரையும் வாயைப் பிளக்க வைத்து விட்டார்.
அப்போது விஜய் சொன்னது உண்மையிலேயே மாஸ் என்று தான் சொல்ல வேண்டும். துணிந்து பல கருத்துகளை சகட்டுமேனிக்குப் போகிற போக்கில் விளாசினார் விஜய். கொள்கைகளைப் பற்றிப் பேசியதும் இப்போ இதைக் கேட்குற போது மற்ற கட்சிக்காரங்களோட கதறல் இனி கேட்கும் என்றார்.