ஃபேன்ஸ் பி ரெடி!. தம்பிக்காக தன் முடிவை மாற்றிய விஜய்… தளபதி 70 பரபர அப்டேட் இதோ!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:40  )

Thalapathy70: நடிகர் விஜய் தன்னுடைய தளபதி70 திரைப்படத்தை நடிக்க இருப்பதாக முக்கிய தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.

நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றி கழகத்தை அறிவித்த பின்னர் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி அவருடைய கோட் திரைப்படம் முடிந்துவிட்டது. இதில் தளபதி 69 திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்து வருகிறது.

கோலிவுட்டில் தற்போது மிகப்பெரிய சம்பளம் வாங்கி கொண்டு இருக்கும் நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் விஜய்தான். அவர் சினிமாவில் பீக்கில் இருக்கும் சமயத்தில் அரசியலுக்கு எண்ட்ரி கொடுக்க இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இந்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய சினிமா கேரியரை 69 படத்துடன் முடிக்கும் ஐடியாவினை கைவிட்டு இருக்கிறாராம். அதுவும் அவருடைய ஆஸ்தான இயக்குனர் தம்பி அட்லீக்காக தானாம். தற்போது விஜய் தளபதி70ல் நடிக்கும் எண்ணத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அட்லீ இயக்க இருக்கும் புதிய படத்தில் சல்மான் கான் மற்றும் கமலஹாசன் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இப்படத்தில் தான் விஜய் ஸ்பெஷல் கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் ஒரு பாடலில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

இயக்குனர் அட்லீ தன்னுடைய சினிமா கேரியரில் இதுவரை இயக்கிய அதிக பட்ச படங்கள் விஜயிற்காக தான். மெர்சல், தெறி மற்றும் பிகில் என எல்லாமே மிகப்பெரிய வெற்றி படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்காகவே அட்லீயின் கோரிக்கையை விஜய் ஏற்று இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Next Story