ஆளப்போறான் தமிழனு நீங்க உருட்டுனது பொய்யா? தளபதியே தமிழ்நாடு இல்லையாம்!..
Vijay: நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நடிகராக இருக்கிறார். தற்போது அரசியல் கொண்டிருக்கும் நடிகர் விஜயை தமிழ்நாட்டு மைந்தன் என பலரும் புகழ் பாடிவரும் நிலையில் அவர் தமிழரே இல்லை என்ற தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கோலிவுட்டில் பிரபல இயக்குனராக இருந்த எஸ்ஏ சந்திரசேகர் அவரின் மகனாக தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் நடிகர் விஜய். முதல் சில படங்கள் அவருக்கு மிகப்பெரிய அளவில் தோல்வியை கொடுத்தது. பல இடங்களில் அவரின் தோற்றம் விமர்சிக்கப்பட்டது.
இருந்தும் மனம் தளராமல் தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் நடிகர் விஜய். அவருடைய அந்த கடின உழைப்பு அவருக்கு மிகப்பெரிய இடத்தை பெற்றுக் கொடுத்தது. தொடர்ச்சியாக வெற்றி படங்களை குவித்தார். இதை தொடர்ந்து கோலிவுட்டின் இளைய தளபதி என்ற பட்டத்தையும் பெற்றார். காதல் படங்களில் மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்தி வந்த நடிகர் விஜய் பகவதி திரைப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். ஒரு கட்டத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் கலவையான விமர்சனங்கள் பெற்றால் கூட வசூலில் எந்தவித பாதிப்பும் இல்லை என்ற நிலை உருவாகியது.
இது தொடர சமீபத்திய காலமாக விஜய்யின் திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ஓபனிங் வசூலை குவித்து 500 கோடியை தாண்டி வெற்றி நடை போட்டு வருகிறது. இதனால் அவருடைய சம்பளமும் ஒவ்வொரு படத்திற்கும் 50 கோடிக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டு கொடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க நடிகர் விஜய் 275 கோடியை சம்பளமாக வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்தை முடித்த கையோடு நடிகர் விஜய் தன்னுடைய முழு கவனத்தையும் அரசியல் பக்கம் திருப்ப இருக்கிறார். இதற்கான கட்சி அறிவிப்பு இந்த வருட தொடக்கத்தில் நடந்தது. சமீபத்தில் இதன் மாநில மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றி கூட்டமாக முடிந்திருக்கிறது.
மற்ற நடிகர்களை போல இல்லாமல் நடிகர் விஜய் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் அவருக்கு அதீத வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது ஒரு வீடியோ பதிவு மூலம் பிச்சை தமிழ்நாட்டை சேர்ந்தவரே இல்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜயின் அம்மா ஷோபாவின் பெற்றோர்களின் பூர்வீகம் ஹைதராபாத்தினை சேர்ந்ததாம். இதை அவர் ஒரு வீடியோவில் தெரிவித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சந்திரசேகர் மேடை நிகழ்ச்சியில் பேசும் போது மலையாளியான எனக்கு தமிழ் சரளமாக வராது எனவும் தெரிவித்திருக்கிறார்.
இதனால் நடிகர் விஜயின் பூர்வீகம் தமிழகம் இல்லை. இது அவருடைய அரசியல் வாழ்க்கையில் பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக பேச்சுக்கள் அடிபட தொடங்கி இருக்கிறது.
- Tags
- Vijay
- தளபதி விஜய்