பிக்பாஸில் வந்தது வீண்போகலை… மீண்டும் முக்கிய இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி…

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:17  )

Vijay Sethupathi: நடிகர் விஜய் சேதுபதி தற்போது முக்கிய இயக்குனரின் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் நாயகி மற்றும் மற்ற சில அப்டேட்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் சின்ன சின்ன ரோல் மூலம் நடிக்க வந்தவர். அவருக்கு சுந்தரபாண்டியன் திரைப்படம் மற்றொரு உச்சத்தினை பெற்று கொடுத்தது. சிறந்த வில்லனாக விருதுகளையும் வாங்கினார். இதை தொடர்ந்து வாய்ப்புகளும் குவிந்தது.

தொடர்ச்சியாக தமிழில் பிஸியாக நடித்து வந்தார். பொதுவாக மற்ற நடிகர்களை போல இல்லாமல் விஜய் சேதுபதி நான் நடிக்க வந்ததே சம்பாரிக்க தான் என வெளிப்படையாக கூறினார். இதனால் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் ஒப்புக்கொண்டார்.

தொடர்ச்சியாக சினிமாவிலும் நடித்து வந்தார். தமிழை தாண்டி மலையாளம் மற்றும் இந்தியிலும் எல்லா படங்களும் நடித்து வெற்றி நாயகனாக வலம் வந்தார். இந்த நிலையில் ஹீரோவில் இருந்து வில்லன் அவதாரம் எடுத்தார். தொடர்ச்சியாக கோலிவுட்டின் டாப் பிரபலங்களுக்கு வில்லனாக நடித்து மாஸ் காட்டினார்.

ஒருகட்டத்தில் அவரின் மார்கெட்டை காலி செய்தது. இதனால் சமீபத்தில் நான் இனி வில்லனாக நடிக்க போவதில்லை எனவும் தெரிவித்தார். அதையடுத்து அவரின் 50வது திரைப்படமாக வெளியான மகாராஜா மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து நெட்பிளிக்ஸ் மிகப்பெரிய வருமானமும் குவித்தது.

இதை தொடர்ந்து விஜய் சேதுபதியும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8ஐ தொகுத்து வழங்கி வருகிறார். அதனால் அவருக்கு தற்போது மீண்டும் வரவேற்பு அதிகரித்து இருக்கிறது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.

நவம்பர் இரண்டாவது அல்லது மூன்றாம் வாரம் வரை மதுரையில் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். அதுபோல நித்யா மேனன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Next Story