விஜய் சேதுபதியின் 'மஹாராஜா' ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!
விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி, அபிராமி, பாரதிராஜா உள்ளிட்டோர் நடிப்பில் நித்திலன் இயக்கத்தில் வெளியான மஹாராஜா படத்தின் ஓடிடி ரிலீஸ் தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தமிழ் சினிமா தடுமாறிக் கொண்டிருந்தது. குறிப்பாக மே ஏப்ரல், மே வரையிலும் கூட வசூல்ரீதியாக எந்தவொரு படமும் வெற்றி பெறவில்லை. இந்த குறையை போக்கும் விதமாக முதலில் சுந்தர் சியின் அரண்மனை 4வந்தது.
தொடர்ந்து விஜய் சேதுபதியின் 5௦-வது படமான மஹாராஜா வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தொடக்கத்தில் இப்படத்திற்கு பெரிதான வரவேற்பு இல்லை. ஆனால் படம் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கவும் ரசிகர்கள் குவிந்து விட்டனர்.
இதனால் அவரது 50-வது படம் என்றாலும் இப்படத்தின் வசூல் 100 கோடியைத் தொட்டு பட்டையை கிளப்பியது. குறிப்பாக படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தாக அமைந்தது. இந்தநிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி இப்படம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நெட் பிளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனால் இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு ஏற்ற வாரம் என்றே கூறலாம்.
ஏனெனில் இப்போது எல்லாம் ஒரு படத்தினை அலசி, ஆராய்ந்து, பிழிந்து காயப்போட்டு விவாதிக்க ஓடிடியும், சமூக வலைதளங்களும் மிகுந்த பங்களிக்கின்றன. திரையரங்கில் ரசிகர்களால் கொண்டாடப்படும் காட்சிகள் ஓடிடியில் மிகுந்த அடி வாங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.