விஜய் இப்படியெல்லாம் யோசிப்பாரா?!. மகாராஜா பட இயக்குனரை ஆச்சர்யப்படுத்திய தளபதி!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:44  )

Maharaja: சினிமா நடிகர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். நல்ல சிறந்த கதைகள் கிடைத்தால் மட்டுமே நடிக்கும் நடிகர்கள் இருக்கிறார்கள். அந்த கதையில் தனது கதாபாத்திரம் வழுவானதாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். மற்றபடி அந்த படம் ஓடுவது பற்றியோ ஒடாதது பற்றியோ கவலைப்பட மாட்டார்கள்.

பசுபதியெல்லாம் இந்த ரகம்தான். ஆனால், அதே பசுபதி திடீரென காமெடி படங்களிலும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைப்பார். அந்த கதாபத்திரமும் பேசப்படும். ஒருபக்கம், சார்பட்டா பரம்பரை, அசுரன், தங்கலான் போன்ற படங்களிலும் அவர் நடிப்பார். மற்றொன்று கமர்ஷியல் மசாலா படங்களில் நடிக்கும் நடிகர்கள். சினிமாவில் இவர்கள்தான் பெரும்பான்மை.

படம் ஓடி தயாரிப்பாளருக்கு லாபம் வர வேண்டும்.. 4 பாட்டு 4 ஃபைட்டு இருக்க வேண்டும்.. கதாநாயகியுடன் வெளிநாட்டில் ஒரு பாடலுக்கு ஆட வேண்டும்.. பாடத்தில் காமெடி இருக்க வேண்டும் என நினைப்பர்கள். விஜய், அஜித்தெல்லாம் இந்த ரகம்தான். அஜித்தாவது முகவரி, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால், விஜயெல்லாம் அந்த ரிஸ்க்கே எடுக்க மாட்டார். தன் ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ அதை மட்டுமே கொடுப்பார். சூரரைப்போற்று, ஜெய்பீம் போன்ற படங்களில் சூர்யா செய்ததையோ, சேது, பிதாமகன்,காசி, தெய்வத்திருமகள், ஐ, தங்கலான் போன்ற படங்களில் விக்ரம் முயற்சி செய்து பார்த்ததையோ விஜய் செய்யவே மாட்டார். தனக்கு அது செட் ஆகாது என்றே நினைப்பார்.

அதேநேரம், அந்த படங்கள் அனைத்தையும் விஜய் பார்ப்பார். தனக்கு நெருக்கமானவர்களிடம் அது பற்றி அவர் பேசுவார் என்பது பலருக்கும் தெரியாது. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான திரைப்படம்தான் மகாராஜா. இந்த படத்தை பார்த்த விஜய் என்ன சொன்னார் என நித்திலன் சாமிநாதன் ஊடகம் ஒன்றில் பேசியிருக்கிறார்.

நான் விஜய் சாரை சந்தித்தபோது மகாராஜா படம் பற்றி விரிவாக பேசினார். குறிப்பாக சிங்கம் புலி மற்றும் விஜய் சேதுபதியின் மகள் கதாபாத்திரம் பற்றியும் விரிவாக பேசினார். ஒரு மாஸ் கமர்சிஷல் ஹீரோ இப்படி மகாராஜா பட கதை பற்றி விரிவாக பேசியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது’ என சொல்லி இருக்கிறார்.

Next Story