பேன் இந்தியானு சொல்லிட்டு பார்டரையே தாண்டல! சிவகார்த்திகேயனுடன் நடிக்க போகும் நடிகர்

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வந்து மிகக் குறுகிய காலத்தில் வெள்ளித்திரையில் கோலோச்சிய ஒரு சிறந்த நடிகராக மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில்தான் இவருக்கு மூன்றாவதாக ஒரு மகன் பிறந்தார். அது சம்பந்தமான புகைப்படங்கள் பல இணையத்தில் வைரலானது.

ஆங்கராக இருந்த சிவகார்த்திகேயன் இன்று பல பேரும் ஆங்கராக நின்று வருகிறார். அந்தளவுக்கு உதவி என வருவோர்க்கு தேவையான உதவிகளை செய்து அவரது வாழ்க்கையில் வெளிச்சத்தை கொடுத்து வரும் ஒரு சிறந்த மனிதராகவும் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

தற்போது சிவகார்த்திகேயன் ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். சிவகாத்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். மேஜன் முகுந்த் வரதராஜனின் பயோபிக்கை அடிப்படையாக வைத்துதான் இந்தப் படம் தயாராகியிருக்கிறது.

படம் அக்டோபர் 31 ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படம் பேன் இந்தியா படமாக பெரிய அளவில் தயாராகிக் கொண்டு வருகிறது.

அதனால் மற்ற மொழிகளில் பெரிய ஹீரோக்களாக இருக்கும் ஒரு சில நடிகர்களை இந்தப் படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. சுரேஷ் கோபி, மோகன்லால், மம்மூட்டி , சிவ்ராஜ்குமார் என பெரிய பெரிய நடிகர்களை நடிக்க வைக்க தீவிரமாக இறங்கினார்கள்.

ஆனால் அவர்களில் யாருமே இப்போது இந்தப் படத்தில் நடிக்கவில்லையாம். அவர்களுக்கு பதிலாக நடிகர் பிஜு மேனன் நடிக்கிறாராம். மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகர் பிஜு மேனன். மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட்டடித்த அய்யப்பனும் கோஷியும் படத்தில் நடித்தவர்தான் இந்த பிஜு மேனன். இவர்தான் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கிறாராம்.

பேன் இந்தியா அளவில் படம் தயாராகும் பட்சத்தில் மிகப்பிரபலமான நடிகர்களை நடிக்க வைத்தால்தான் மக்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகும் . ஆனால் பிஜு மேனனை பொறுத்தவரைக்கும் நம் தமிழ் ரசிகர்ளிடம் அவரது புகைப்படத்தை காட்டி இவர்தான் பிஜூமேனன் என்று சொன்னால்தான் தெரியும். இப்படி இருக்கும் போது சிவகார்த்திகேயனுடான படத்தில் இவருக்கு அப்படி என்ன கேரக்டர் என தெரியவில்லை.

Next Story