துக்கடா கேரக்டருக்கும் ராசி வேணுமா? அஜித் படத்தில் இருந்து தூக்கப்பட்ட விக்ரம்

இன்று தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விக்ரம். விஜய், அஜித் இவர்களையும் தாண்டி நடிப்பில் தனி பாணியை உருவாக்கினாலும் அவர்களைப் போல் பாக்ஸ் ஆபிஸில் விக்ரமின் படங்கள் வசூலை அள்ள முடியவில்லை. நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்தாலும் இவருடைய படங்கள் பெரிய அளவில் இதுவரை கலெக்ஷனை அள்ளியதும் இல்லை.
சேதுபடத்திற்கு முன்பு சேது படத்திற்கு பின்பு என இவருடைய சினிமா வாழ்க்கையை பிரித்துப் பார்க்கலாம். சேது படத்திற்கு முன்பு கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் இவர் நடித்திருக்கிறார் .அந்தப் படங்கள் எதிர்பார்த்த அளவு இவருக்கு வெற்றியை தரவில்லை. நடிகராக மட்டும் இல்லாமல் டப்பிங் கலைஞராகவும் இருந்திருக்கிறார். ஏன் அஜித், அப்பாஸ், பிரபுதேவா என இவர்களுக்கெல்லாம் குரல் கொடுத்திருக்கிறார் விக்ரம்.
சேது படம் தான் இவரை மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கைக்குறிய நடிகராக நிலை நிறுத்திய திரைப்படம். அந்த படத்திற்கு பிறகு வரிசையாக படங்களில் நடிக்க தொடங்கினார். காசி, ஐ , கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான தங்கலான் போன்ற திரைப்படங்கள் எல்லாமே இவருடைய நடிப்பிற்கு தீனி போட்ட படங்களாகும். ஆனால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுத்த படங்களா என்றால் அதுதான் இல்லை.
இருந்தாலும் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு இன்று கோலிவுட்டில் ஒரு நம்பிக்கை மிகு நடிகராக திகழ்ந்து வருகிறார் விக்ரம். இந்த நிலையில் அஜித் நடித்த ஒரு படத்தில் ஒரு சாதாரண துணை நடிகர் கேரக்டருக்கு வாய்ப்பு கேட்டு அலைந்திருக்கிறார் விக்ரம். அது வேறு எந்த படமும் இல்லை காதல் கோட்டை. அந்த படத்தில் நடிகர் ராஜா ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருப்பார் .
இந்த படத்தின் கதை பற்றி ஏற்கனவே விக்ரமுக்கு தெரியும். இந்த படத்தின் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன். அவருடைய மேனேஜர் ஒருவர் விக்ரமுக்கு நெருங்கிய நண்பர். அதனால் அந்த மேனேஜரை அழைத்து விக்ரம் காதல் கோட்டை படத்தில் அந்த கேரக்டரில் நான் நடிக்கிறேன் என கேட்டாராம் .இதை தயாரிப்பாளரிடம் அந்த மேனேஜர் சொல்ல அதற்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அவர் ஒரு ராசியில்லாத நடிகர்.
அதனால் வேண்டாம் என சொல்லி இருக்கிறார்கள். அதற்கு இந்த மேனேஜர் ஒரு சாதாரண கேரக்டருக்குமா ராசி வேண்டும் என கேட்டாராம் .அதே விக்ரம் தான் இன்று எந்த அளவு நடிப்பின் உச்சமாக திகழ்ந்து இருக்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எல்லாவற்றையும் தாண்டி சினிமா தான் உலகம் என வாழ்ந்து வருபவர் விக்ரம். இருந்தாலும் அந்த படத்தில் விக்ரமால் நடிக்க முடியவில்லை. இந்த தகவலை மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறினார்..