இதுக்கு தளபதியோட 'புலி'யே தேவலாம்... தங்கலானை கலாய்க்கும் ரசிகர்கள்!
நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் படத்தின் டிரெய்லர் நேற்று ( ஜூலை 10) வெளியானது. விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், முத்துக்குமார், பசுபதி என ஏராளமானோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கோலார் தங்கச் சுரங்கத்தின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் படம் கோடை விடுமுறையில் தான் வெளியாவதாக இருந்தது.
ஆனால் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தள்ளிப்போனது. தொடர்ந்து படத்தின் வெளியீடு தள்ளித்தள்ளி போய், இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்களுடன் இணைந்து விக்ரமும் காத்திருக்கும் சூழ்நிலை தான் தற்போது நிலவுகிறது.
இந்தநிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. அதற்கு காரணம் படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தான். விக்ரம் புலியுடன் மோதுவது போன்ற காட்சி ஒன்று டிரெய்லரில் வருகிறது. இந்த சண்டைக்காட்சி ரசிகர்களைக் கவர்ந்தாலும் இதன் சிஜி காட்சிகள் சுமாராக உள்ளன.
மேலும் படம் முழுவதுமே கிராபிக்ஸ் காட்சிகள் மொக்கையாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் 9 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தளபதி விஜயின் புலி படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் துல்லியமாக இருந்தன.
தற்போது தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்து விட்ட நிலையில் அதுபோல கிராபிக்ஸ் காட்சிகள் தங்கலானில் தரமாக இல்லை என்றும் கூறுகின்றனர். அதோடு படத்தில் சூனியம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதால், இது உண்மை சம்பவமா? இல்லை கற்பனை கதையா/ என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எது எப்படி இருந்தாலும் படம் வெளியான பிறகு தான் முழு உண்மையும் தெரியவரும் என்பதால் நாம் அதுவரை பொறுத்திருந்து பார்க்கலாம்.