எங்கடா இருந்தீங்க இத்தனை பேரு? ‘தங்கலான்’ படத்தோடு மோத இருக்கும் படங்களின் லிஸ்ட் இதோ

by ராம் சுதன் |

ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒத்தையா வந்து கெத்து காட்ட நினைத்த தங்கலானின் நெனப்புக்கு மொத்தமா மண்ணள்ளிப் போட்ட விதமாக அந்த படத்தோட இன்னும் சில படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் , மாளவிகா மோகனன் நடிப்பில் உருவான திரைப்படம் தங்கலான். பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு விக்ரம் இந்தப் படத்தின் மூலம் வேற லெவலுக்கு செல்வார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பொன்னியின் செல்வனுக்கு பிறகு அவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. அதனால் ஹீரோவாக தங்கலான் படத்தை கண்டிப்பாக வெற்றியடைய வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் விக்ரம். அதற்கு ஏற்றப்படி இந்தப் படத்தில் விக்ரமின் கெட்டப் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

ஆஸ்கார் விருது வரை இந்தப் படம் செல்லும் என்றும் பேசப்படுகிறது. கேஜிஎஃபில் நடந்த ஒரு உண்மைக்கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமாக தங்கலான் திரைப்படம் வெளிவர இருக்கிறது. படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே வெளியாக வேண்டியது. தக்க நேரத்தை எதிர்பார்த்து படக்குழு காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டதில் இருந்து படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனெனில் தொடர்ந்து நான்கு நாள்கள் விடுமுறை நாள் என்பதால் கண்டிப்பாக செலிபிரேஷனாகத்தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் கூடவே பிரசாந்த் நடிப்பில் ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படமான அந்தகன் திரைப்படமும் தங்கலான் படத்தோடுதான் மோத இருக்கின்றன. அதே ஆகஸ்ட் 15 ஆம் தேதிதான் அந்தகன் திரைப்படமும் ரிலீஸாக இருக்கின்றன.

அதுமட்டுமில்லாமல் கீர்த்தி சுரேஷ் லீடு ரோலில் நடித்த ரகு தாத்தா மற்றும் அருள் நிதி நடிப்பில் தயாரான டிமாண்டி காலனி 2 என இந்த இருபடங்களுமே ஆகஸ்ட் 15 ஆம் தேதிதான் ரிலீஸ் ஆகின்றன. ஆக ஒரே தேதியில் இந்த நான்கு திரைப்படங்களும் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தை படைக்க இருக்கின்றன.

Next Story