Categories: latest news

படமே முடியபோகுது.. இப்ப இப்படி ஒரு அப்டேட்டா?.. விடாமுயற்சியில் இணைந்த பிரபலம்..!

நடிகர் அஜித் : தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அஜித். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்று இரண்டு திரைப்படங்களை தனது கைவசம் வைத்திருக்கின்றார். இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பும் ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. கடந்த 2 வருடத்திற்கு முன்பு பொங்கலுக்கு அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியானது.

அதன் பிறகு அஜித் கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை ஜவ்வு போல் இழுத்து வருகின்றார் இயக்குனர். ஒரே நாளில் நடந்த கதையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்கள். மேலும் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது.

அங்கு ஏற்பட்ட கால சூழ்நிலை மாற்றம் காரணமாக படப்பிடிப்பு இவ்வளவு தாமதமானதாக கூறப்படுகின்றது. இருப்பினும் விடாமுயற்சி படத்திற்கு காத்திருந்து ரசிகர்கள் மிகவும் நொந்து விட்டார்கள். இதற்கு இடையில் நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் தான் குட் பேட் அக்லி இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகின்றது.

படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. முதலில் இந்த திரைப்படம் தான் பொங்கலுக்கு ரிலீசாகிறது என்று கூறி வந்த நிலையில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகின்றது. இதனால் குட் பேட் அக்லி திரைப்படம் மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எது எப்படியோ இரண்டு திரைப்படத்தின் படப்பிடிப்புகளையும் நடிகர் அஜித் முடித்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருப்பதால் முழுக்க முழுக்க அதில் கவனம் செலுத்தி வருகின்றார். அடுத்த வருடம் அவரின் கார்பந்தயம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. விடாமுயற்சி திரைப்படத்தின் பேட்ச் ஒர்க் தற்போது பேங்க்காகில் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

மேலும் அங்கிருந்து நடிகர் அஜித் மட்டும் திரிஷாவின் புகைப்படங்கள் வெளியாகி இணையதள பக்கங்களில் வைரலாகி வந்தது. கோட் சூட்டில் பார்ப்பதற்கு ஜேம்ஸ்பாண்ட் போல் இருப்பதாக பலரும் கூறி வந்தார்கள். மேலும் நடிகர் அஜித் தற்போது தனது முழு உடல் எடையையும் குறைத்து ஸ்லிம்மாக காட்சியளிக்கின்றார். அந்த வகையில் தற்போது புது அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கின்றது.

என்னவென்றால் நடிகர் அஜித் தொகுப்பாளினி ரம்யா உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி அவர் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். இதை பார்த்த ரசிகர்கள் படமே முடிய போகுது இப்போதுதான் இவர் படத்திலேயே இணைகிறாரா? என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். எது எப்படியோ நடிகர் அஜித் பட்டு வேட்டி சட்டையில் பார்ப்பதற்கு செம க்யூட்டாக இருக்கும் புகைப்படம் இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

Also Read: ‘இட்லி உப்புமா’ நியாபகம் இருக்கா? அப்படி இப்ப வரைக்கும் மறக்க முடியாத சில படங்களின் காட்சிகள்

ramya suresh

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

4 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

5 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

6 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

19 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

19 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

1 day ago