சர்ச்சையில் சிக்கிய விஜே சித்து… புரட்டி எடுக்கும் நெட்டிசன்கள்… அடுத்த பலியாடு நீங்கதானா?
VJSiddhu: பிரபல யூட்யூபர் விஜே சித்து ஒரே வீடியோவால் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். இது குறித்து சில அதிர்ச்சியான தகவல்களும் தற்போது வெளியாகி இருக்கிறது.
சமீப நாட்களாகவே பிரபல யூட்யூப்பர்கள் செய்யும் பித்தலாட்டங்கள் வெளியாகி அவர்களுடைய சப்ஸ்க்ரைபர்களை கோபப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போதைய லிஸ்டில் புதிதாக இணைந்திருக்கிறார் பிரபல யூட்யூபரான விஜே சித்து.
பிளாக் ஷீப் சேனலில் பிரான்சு மூலம் பிரபலமானவர் விஜே சித்து. அதில் கிடைத்த புகழை வைத்து விஜே சித்து என்ற பெயரில் புதிய சேனலில் தொடங்கினார். தன்னுடைய நண்பர்களுடன் பயணம் செய்து அதில் அவர் வெளியிடப்படும் வீடியோக்கள் வைரலாக தொடங்கியது.
அதிகளவில் 90ஸ் மெமரிகள் இருப்பதால் இவருடைய வீடியோவிற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகின. 40 லட்சத்தை சப்ஸ்கிரைபர்கள் கணக்கு தாண்டியது. நன்றாக வீடியோ செய்து கொண்டிருந்த விஜே சித்து சமீப நாட்களாக அவருடைய வீடியோக்கள் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொண்டே வந்தது.
அது மட்டுமல்லாமல் சமூகத்தின் சில சென்சிட்டிவ் விஷயங்களை நக்கலாக பேசி அவர் வீடியோ வெளியிட அது ரசிகர்களை அவர் மீது கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ தற்போது அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்களால் துவைத்து எடுக்கப்பட்டு வருகிறார்.
அந்த வீடியோவில் தன்னுடைய நண்பர்களுடன் நிக்கல் குந்தல் விளையாட்டு விளையாடுகிறார். தவறாக விளையாடும் ஆட்களை மற்றவர்கள் அடிப்பது தான் அந்த விளையாட்டு. அப்படி அவர்கள் ஆடத் தொடங்க எல்லோருக்கும் அடி கிடைக்கிறது.
ஒரு கட்டத்தில் ஒருவர் குந்தல் சொல்லாமல் உட்கார அவரை விஜே சித்து அடித்த ரகம் தான் தற்போது பிரச்சனைக்கு காரணம். அத்தனை லட்சம் மக்களுக்கு முன்னர் வெளியிடப்படும் வீடியோவில் விஜே சித்து அவரை அடிப்பதும், எட்டி உதைப்பதும் இடம் பெற்று இருக்கிறது.
அடி வாங்கியவர் சிரித்துக்கொண்டே இருந்தாலும் பொதுவெளியில் இப்படி ஒரு வீடியோ வெளியிடுவது சரிதானா என்ற கேள்வி எழுந்து வருகிறது. தொடர்ச்சியாக விஜே சித்து விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் சேனலில் குறிப்பிட்ட அந்த பகுதி டிரிம் செய்யப்பட்டு நீக்கப்பட்டிருக்கிறது.
இருந்தும் தற்போது அந்த வீடியோ எல்லா சமூக வலைத்தளங்களிலும் வைரல் ஆகி வருகிறது. பிரபலமான யூடியூப் அவர்கள் தேவையில்லாமல் இப்படி சர்ச்சையில் சிக்கி மொத்தமாக அவர் கேரியரை இழப்பதும் வாடிக்கையாக மாறுகிறது.