சிம்பொனின்னா என்னன்னு தெரியுமா? நாளை இளையராஜாவுக்கு உள்ள சவால் இதுதான்!

by sankaran v |
சிம்பொனின்னா என்னன்னு தெரியுமா? நாளை இளையராஜாவுக்கு உள்ள சவால் இதுதான்!
X

இளையராஜா லண்டனுக்குப் போகிறார். நாளை சிம்பொனியை அரங்கேற்றுகிறார். இது உலக அரங்கில் உற்றுக் கவனிக்கப்படும் விஷயம். கொஞ்சம் அலசலாம் வாங்க...

4 வயலின், பியானோ, ப்ளூட் எல்லாம் வெச்சி வாசிச்சிட்டு அதை சிம்பொனின்னு தமாஷ் பண்ணாதீங்கப்பான்னு இசைஞானி இளையராஜா சொல்கிறார். பீத்தோவான், மொஷார்ட், ஹேடன் மாதிரி உலக மகா இசை மேதைகள் ஒரே நேரத்துல கிட்டத்தட்ட 100 இசைக்கலைஞர்களின் கருவிகளையும் தன்னோட கை அசைவில் கட்டுப்படுத்தி வாசிக்க வைக்கப் போகிறார் இளையராஜா.

வெஸ்டர்ன் கிளாசிக்கல்: அது வழக்கமா அவர் வெளிநாட்டுக் கச்சேரிகளில் வாசிக்கிறதுதானேன்னு கேட்கலாம். சங்க இலக்கியத்துக்கும், இசைத்தமிழ் வெண்பாவுக்கும் என்று ஒரு இலக்கணம் இருக்கிறது. அதே போல இசையை முறையா படிச்சிட்டு அதற்கே உரிய இலக்கணத்தோடு இசை அமைக்கிறார் இளையராஜா. அதிலும் ஒரு படி மேல போய் இந்திய இசை வாடையே இல்லாம சுத்தமான வெஸ்டர்ன் கிளாசிக்கல் வாசிக்கப்போகும் ஒரே இந்திய இசை அமைப்பாளர் இளையராஜாதான்.

தியரி: வெஸ்டர்ன் கிளாசிகல் இசைக்கருவிகளில் வயலின், ஸ்டெல்லோ, புல்லாங்குழல், கிளாரிநெட், சாக்ஸபோன், தாள இசைக்கருவிகள் ஒரே நேரத்துல வாசிக்கப்படும். அதற்கேற்ப தியரியாக இசைக்குறிப்புகளை இளையராஜா எழுதியுள்ளார். சினிமா பாட்டுக்கு பெரிசா இலக்கணம் இருக்காது.

சிம்பொனி இலக்கணம்: யார் வேணாலும் நல்லாருக்குன்னு ரசிப்பாங்க. ஆனா கர்நாடக இசைக்கு கீர்த்தனைகள் உணர்வுப்பூர்வமா இருக்கணும். கீர்த்தனையில் பல்லவி, அனுபல்லவி, சரணம், நரவல்னு 4 பாகம் இருக்கு. அதுபோல சிம்பொனியிலும் இருக்கு. பல்லவி, சுருதி, சரணம், அதுல டெவலப்மெண்ட், இம்ப்ரூவைசேஷன், கவுண்டர் பாய்ண்ட் எல்லாம் மேற்கத்திய கிளாசிக்கல் இசையை நுணுக்கத்தோடு சொல்ல வேண்டும். மறுபடியும் ஒரிஜினல் தீம் ஸ்கோருக்கு வந்து முடிக்க வேண்டும். அதுதான் சிம்பொனி.

40 வருஷத்துக்கு முன்: இளையராஜா 40 வருஷத்துக்கு முன்னாடியே சிம்பொனியைத் தழுவி சில பாடல்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். சுந்தரி கண்ணால் ஒரு சேதி, ஓ பிரியா... பிரியா, என் இனிய பொன்நிலாவே, மடை திறந்து, நினைவோ ஒரு பறவை ஆகிய பாடல்களைச் சொல்லலாம்.

மிகப்பெரிய சவால்: சிம்பொனியில் மிகப்பெரிய சவால் ஒன்று உண்டு. இதுவரை உலகில் எந்த இசை அமைப்பாளரும் வாசிக்காத, தழுவாத, தனித்துவமான இசையை அதுக்கே உரிய இலக்கணத்தோடு தரணும். இதுல இளையராஜா தனக்கே ஒரு சவாலையும் வைத்துள்ளார்.

ஒரு இந்தியன் வந்து இந்திய இசையை வாசிச்சிட்டுப் போயிட்டான்னு யாரும் சொல்லக்கூடாது. அதனால எந்த இடத்திலும் இந்திய இசையின் டச்சே வராதவாறு பார்த்துக்கறதுக்காக ரொம்பவே மெனக்கிட்டுள்ளாராம் இளையராஜா. இவ்வளவு சவாலான வெஸ்டர்ன் கிளாசிக்கல் தியரியை எழுத வெறும் 34 நாள்கள்தான் ஆனதாம்.

Next Story