2024ல தமிழ்சினிமா வின்னர் யாரு... தியேட்டர் ஓனர்களோட வாய்ஸ்...!

by sankaran v |
2024ல தமிழ்சினிமா வின்னர் யாரு... தியேட்டர் ஓனர்களோட வாய்ஸ்...!
X

2024ல வந்த படங்கள்ல எது நல்ல வசூலைக் கொடுத்தது? எது ஏமாற்றியது என திரையரங்கு உரிமையாளர்கள் கலந்துரையாடல் நடந்துள்ளது. அதுல சிகே சினிமாஸ் ரூபன், ரோகினி தியேட்டர் ரேவந்த், வெற்றி தியேட்டர் ராகேஷ், கேசினோ தியேட்டர் அருண், வரதராஜா தியேட்டர் அங்கிதா, வுட்லண்ட்ஸ் வெங்கடேஷ், கமலாசினிமாஸ் விஷ்ணு ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் பேசியவற்றின் தொகுப்பு என்னன்னு பார்க்கலாமா...

கங்குவா ஹைப் கொடுத்தது. ஆனா படம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. படத்துக்காக சவுண்டை நாங்களே முதல்ல கம்மி பண்ணத்தான் செஞ்சோம். முதல்லயே இதை அவங்க செஞ்சிருந்தாங்கன்னா கொஞ்சம் நல்லாருந்துருக்கும் என்கிறார் கேசினோ தியேட்டர் அருண். கங்குவாவைப் பொருத்த வரை எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லைன்னு தான் சொல்லணும். பெரிய எதிர்பார்ப்புல கொஞ்சம் கம்மியானாலும் அது திருப்தி இல்லாம போயிடும்.

கோட் படத்துக்கு ஆரம்பத்துல ஹைப்பே இல்லை. கடைசியா பிரேம்ஜி, வெங்கட்பிரபு பேசுனதுக்கு அப்புறம் தான் அந்த ஹைப் ஏறுச்சு என்கிறார் வெற்றி தியேட்டர் ராகேஷ். எதிர்பார்ப்பே இல்லாம படம் பார்த்து நல்லாருந்தா அது ரொம்ப ரீச்சாகிடும். 3 மணிநேரமா தியேட்டர்ல உட்கார முடியல. அதனாலும் படம் பிக்கப் ஆகலை. திருச்சிற்றம்பலம் சிம்பிளான படம். அது ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது.

ரசிகர்களோட பல்ஸ்சைக் கரெக்டா பிடிக்கலன்னா மிஸ் ஆகிடும். மதில் மேல் பூனை மாதிரி ஆகிடும். கங்குவா படத்துக்கு ஸ்டுடியோ கிரின் ஞானவேல் ராஜா 2000 கோடின்னு சொன்னாரு. படத்தோட வெற்றி விழாவுக்கு பாஸ்; பத்திரமா வச்சிருங்கன்னாரு. நான் பத்திரமா வச்சிருக்கேன். நேரு ஸ்டேடியத்துல இதுவரைக்கு கன்பார்ம் பண்ணல. அது எப்போ வருதுன்னு தெரியல... சக்சஸ் மீட்டுக்கு. இந்தப் படம் பார்த்துட்டு வாயைப் பொளப்பீங்கன்னு சூர்யா சொன்னாரு.

அந்தப் படம் பார்த்துட்டு ஜனங்க பார்க்காமலேயே ஓடிப்போயிட்டாங்க. வாயைத் திறந்துக்கிட்டே போயிட்டாங்க. என்று காமெடியாக சொல்கிறார் வுட்லண்ட்ஸ் தியேட்டர் ஓனர் வெங்கடேஷ். முதல் நாள் முதல் ஷோவுல ஆடியன்;ஸ்கிட்ட என்ன ரீச் வருதோ அதுதான் படம் மாஸாகுறதும், பிளாப் ஆகுறதும் என்கிறார். புஷ்பா 2 ஒரே மாதிரி தான். டியூரேஷன்தான் அதிகம். மற்றபடி பார்ட் 1 சூப்பர்.

புஷ்பா 2க்கு அவ்ளோ ஹைப் கொடுக்குற அளவுக்கு புக்கிங் பறக்கல. புஷ்பா 1க்கூட கம்பேர் பண்ணும்போது அது சூப்பர் என்கிறார் வரதராஜா தியேட்டர் ஓனர் அங்கிதா. புஷ்பா 2 மூன்றரை மணி நேரம் ஓடுது. அப்போ ஷோ டைம் மாறுது. 11.30, 3, 6.30, 10 மணி காட்சிகள் தான் நார்மலா தியேட்டர்ல உண்டு. இந்தப் படத்துக்கு ரன்னிங் டைம் 3மணி 20 நிமிடம். அதனால ஷோ டைம் மாறும். ஆனா நார்மலா உள்ள டைமிங்ல தான் ஜனங்களோட மைன்ட் செட்டா இருக்கும். அதுவே படத்துக்கு மைனஸ் ஆகிடும் என்கிறார் வுட்லண்ட்ஸ் தியேட்டர் ஓனர் வெங்கடேஷ்.

கோட், அமரன் என்று முதல் 2 இடங்களைப் பிடித்ததைப் பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் சொல்றாங்க. அடுத்ததாக 3வது இடத்துல மஞ்சுமெல் பாய்ஸ், கில்லின்னு சொல்றாங்க. விடுதலை 2க்கு எதிர்பார்ப்பு இருக்கு. 2025ல் அஜீத்தோட 2 படம் இருக்கு. தளபதி 69 இருக்கு. கூலி படம் இருக்கு. தக் லைஃப் இருக்கு. இதுதான் அடுத்த ஆண்டு மிகவும் எதிர்பார்ப்புல இருக்கு என்கிறார்கள். அதே சமயம் ஒரு சிலர் கூலி, தக்லைஃப்புக்குப் பிறகு குட் பேட் அக்லியை சொல்றாங்க.

Next Story