விக்ரம் படங்கள் தொடர்ந்து பிளாப் ஆக இதுதான் காரணமா? இதே தான் பல ஹீரோக்களுக்கும்…!

Published on: August 8, 2025
---Advertisement---

சமீபகாலமாக விக்ரம் படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறுவதில்லை. தங்கலான் படத்தில் கடின உழைப்பைப் போட்டும் படம் எதிர்பார்த்த வசூலைக் கொடுக்கவில்லை. வீர தீர சூரனாவது பிக்கப் ஆகுமா என்றால் அதுவும் அப்படித்தான் ஆகிவிட்டது. சூர்யாவின் படங்களும் அப்படித்தான் தொடர்ந்து பிளாப்பையே சந்தித்து வருகின்றன.

கங்குவா படமும் சரி. சமீபத்தில் வெளியான ரெட்ரோ படமும் சரி. எதிர்பார்த்த வசூல் இல்லை. தொடர்ந்து இப்படி பிளாப் வரும்போது அவர்களுக்கே ஒரு கட்டத்தில் சலிப்பு வந்து விடும். தப்பு எங்கே நடக்குது என்பது அவர்களுக்கே தெரியாமல் போய்விடுகிறது. விக்ரம் படங்களை எடுத்துக் கொண்டால் சேது, பிதாமகன், அந்நியன் படங்களில் அவருடைய உழைப்பும் இருக்கும்.

அதற்கேற்ற பலனும் கிடைத்தது. அதே நேரம் பிதாமகனில் விக்ரமும், சூர்யாவும் இணைந்து நடித்து அசத்தினர். இருவருக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. சூர்யாவும் சரி. விக்ரமும் சரி. படங்களில் கேரக்டர்களுக்கு ஏற்ப உடலை வருத்தி நடிக்கக் கூடியவர்கள்தான்.

உடல் மெலியணுமா? சிக்ஸ் பேக் வேணுமா? சளைக்காமல் உடலைக் கேரக்டர்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்கள். அந்த வகையில் விக்ரம் படம் இனி வெற்றி பெற அவர் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஆலோசனைகள் தெரிவித்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

விக்ரமைப் பொருத்தவரை அவர் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்பது எல்லாருக்கும் தெரியும். அதுமாதிரி ஒரு கதாபாத்திரம் மட்டும் சரியாக அமைந்துவிட்டால் அதற்காக தன்னுடைய உயிரையேக் கொடுக்கக்கூடியவர் விக்ரம். எந்தளவுக்கு வேண்டுமானாலும் தன்னுடைய உடலை வருத்திக்கொள்வார்.

அப்படி இருந்தும் அவருடைய திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை என்றால் அதற்கு முக்கியமான காரணம் அவர் கதை தேர்விலே கோட்டை விடுகிறார். அதனால் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க அனுபவம் வாய்ந்த ஒரு கதைக்குழுவை அமைத்துக் கொண்டார் என்றால் நிச்சயமாக ஒரு பெரிய வெற்றியைத் தொடர்ந்து அவர் அடைய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment