‘இந்தியனை’ ஏன் இந்துஸ்தானினு ஹிந்தியில் ரிலீஸ் செஞ்சாங்க தெரியுமா? அதுக்கு காரணம் கேப்டன்தானாம்

by ராம் சுதன் |   ( Updated:2024-07-17 17:34:37  )
indian
X

மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. 7 வருடங்களை கடந்து சமீபத்தில் தான் இந்த படம் வெளியாகி இருக்கிறது.

இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் வெற்றி இந்தியன் 2 படத்தில் எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்திருந்தது. ஆனால் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பையும் இந்தியன் 2 திரைப்படம் சுக்கு நூராக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் படத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

ஷங்கரின் இயக்கத்தில் இப்படி ஒரு படத்தை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்று பல பேர் கூறி வருவதை நாம் பார்த்து வருகிறோம். தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகி இருக்கும் இந்த படம் ஹிந்தியில் ஹிந்துஸ்தானி என்ற பெயரில் ரிலீஸாகி இருக்கிறது. இந்தியன் படத்தின் முதல் பாகமும் மூன்று மொழிகளில் தான் வெளியானது.

அப்பவும் ஹிந்தியில் ஹிந்துஸ்தானி என்ற பெயரில் தான் வெளியானது. இந்தியன் என்பது ஒரு பொதுவான பெயர். ஹிந்தியில் ஏன் இந்தியன் என்ற பெயரிலேயே வெளியாகவில்லை என்பதற்கான காரணம் தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றது.

தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்தியன் என்ற பெயரில் தான் படம் வெளியானதாம். அதேபோல் ஹிந்திலும் இந்தியன் என்ற பெயரில் ரிலீஸ் செய்யலாம் என நினைத்தார்களாம். ஆனால் ஹிந்தியில் சன்னி தியோல் ஏற்கனவே இந்தியன் என்ற பெயரில் ஒரு படத்தை எடுக்கப் போவதாக அறிவித்திருந்தாராம்.

அதன் காரணமாகவே தான் ஹிந்துஸ்தானி என்ற பெயரில் படம் ரிலீஸ் ஆகி இருக்கின்றது. தமிழில் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட்டான வல்லரசு திரைப்படத்தை தான் சன்னி தியோல் இந்தியன் பெயரில் எடுக்க நினைத்தாராம்.

Next Story