தாத்தா மற்றும் அங்கிள்களின் ஆதிக்கம்! படங்களின் தொடர் தோல்விக்கான காரணத்தை சொன்ன ப்ளூசட்டை மாறன்

Published on: August 8, 2025
---Advertisement---

சமீபகாலமாக பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகின்றன. பல கோடி முதலீட்டை போட்டு பெரிய அளவு பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுக்கிறார்கள் என்றால் போட்ட முதலீடை கூட அவர்களால் எடுக்க முடியவில்லை. அதனால் தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. ஆனால் படம் வெற்றியோ தோல்வியோ அடுத்து அந்த நடிகர் தன்னுடைய சம்பளத்தை மட்டும் உயர்த்தி கேட்டு விடுகிறார். இது தமிழ் சினிமாவில் அதிகமாகவே நடக்கிறது.

bluesattaimaran

bluesattaimaran

மற்ற சினிமாக்களை பொறுத்த வரைக்கும் படம் ரிலீஸ் ஆகட்டும். வெற்றி அடைந்தால் அதற்கு ஏற்ப சம்பளத்தை வாங்கிக் கொள்கிறேன். தோல்வி அடைந்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் தான் நடிகர்கள் ஒரு படத்திலேயே கமிட் ஆகின்றனர் .ஆனால் தமிழில் அப்படி கிடையாது .ரஜினி விஜய் அஜித் இவர்கள் என்றால் தனியாக பெரும் கோடியை எடுத்து வைத்து விட வேண்டும் .அந்த படத்தின் கதை அவர்களுக்கு பிடிக்கிறதா இல்லையா? படம் நல்லா இருக்குமா நல்லா இருக்காதா என்றெல்லாம் அவர்கள் கருத்தில் எடுத்துக் கொள்வதே இல்லை.

ஒரு படத்திற்கு இவ்வளவு கோடி சம்பளம். இதுதான் அவர்களுடைய டார்கெட் .இப்படியே போனால் தமிழ் சினிமா எங்கு போய் முடிய போகிறது என்று தெரியவில்லை .ஆனால் ஒரு பக்கம் பெரிய நடிகர்களின் படங்கள் தோல்விகளை சந்தித்து வரும் அதே வேளையில் சின்ன பட்ஜெட் படங்கள் மக்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி நல்ல ஒரு திரைக்கதை. அதை இப்போது வரை மக்கள் கொண்டாடி வருகின்றனர் .

ஆனால் பெரிய நடிகர்களின் படங்களை கொண்டாடுவது மாதிரி சின்ன பட்ஜெட் படங்களையும் மக்கள் கொண்டாட மறுக்கின்றனர். அது ஏன் என இப்போது வரை தெரியவில்லை. இந்த நிலையில் இப்படி பெரிய நடிகர்களின் படங்கள் தோல்வியை தழுவுவதற்கான காரணம் என்ன என்பதை பற்றி ப்ளூ சட்டை மாறன் அவருடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

40 வயதை நெருங்கும் ஹீரோக்கள் பலர் இங்கு உள்ளதால் பல ஆண்டுகளாக தமிழில் கொடிகட்டி பறந்த காதல் படங்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதே போல தாத்தா மற்றும் அங்கிள்களின் ஆதிக்கம் பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் உள்ளது. ஆகவே இளைஞர்களைக் கவரும் நியூ ஏஜ் படங்கள் மற்றும் குடும்ப கதைகள் வருவதில்லை. இவர்களில் பலர் கேங்ஸ்டர், டான் கதைகளில் நடிக்கவே விரும்புகிறார்கள்.

இது திரைப்பட ரசிகர்களை கடும் சலிப்பு நிலையை நோக்கி நகர்த்தி வருவதால் இப்படியான படங்கள் தோற்க ஆரம்பித்து விட்டன என அந்த பதிவில் குறிப்பிட்டு அதனுடன் நடிகர்களின் வயதையும் குறிப்பிட்டு இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். ஆனால் இதை சாக்‌ஷி தேஷ்பாண்டே என்ற ஒரு திரைப்பட ஆய்வாளர் கூறியிருப்பதாக ப்ளூ சட்டை மாறன் அந்த பதிவில் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment