கங்குவாவுக்கு கடைசி செக்!.. இந்த முறை பிரதீப் ரங்கநாதனா?.. மீண்டும் ஓட்டம் எடுக்கிறாரா சூர்யா?..

by saranya |   ( Updated:2024-10-14 02:31:03  )
கங்குவாவுக்கு கடைசி செக்!.. இந்த முறை பிரதீப் ரங்கநாதனா?.. மீண்டும் ஓட்டம் எடுக்கிறாரா சூர்யா?..
X

ஜெயம் ரவியின் கோமாளி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாகவும் மாறினார். தொடர்ந்து இரண்டு படங்களிலும் வெற்றி பெற்றவர். அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்திலும் நடித்துள்ளார். டிராகன் திரைப்படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக காத்திருக்கிறது. கோட் படத்தை தொடர்ந்து இந்தப் படமும் அர்ச்சனா கால் பாத்திக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் படத்தை தவறவிட்ட விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை ஒரு நவம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரெட் ஜெயன்ட் நிறுவனம் அந்தப் படத்தை வெளியிட உள்ள நிலையில், அதற்கு போட்டியாக சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியாகுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏற்கனவே பெரியவரான ரஜினிகாந்த்க்கு வழிவிட்டு சூர்யா கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை அக்டோபர் 10 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 14-ஆம் தேதிக்கு மாற்றினார். இந்நிலையில், இளையவரான பிரதீப் ரங்கநாதனுக்கும் சூர்யா வழி விடுவாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாக உள்ள நிலையில், அந்த படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் புரோமோஷனையும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இன்னமும் ஆரம்பிக்காமல் உள்ளது பல குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு சூர்யாவின் கங்குவா திரைப்படம் தள்ளிப் போகவும் வாய்ப்பு இல்லை என்கின்றனர். ஏற்கனவே பொங்கலுக்கு அஜித்தின் குட் பேட் அக்லி, ஷங்கரின் கேம் சேஞ்சர், கமல்ஹாசனின் தக் லைஃப் உள்ளிட்ட படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story