நடிகர் விஜய் அடிக்கடி பாண்டிச்சேரிக்கு சென்று வருவதற்கு பின்னணியில் இப்படியொரு விஷயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாண்டிச்சேரி முதலமைச்சரை நடிகர் விஜய் சந்திக்கவும் அதுதான் காரணம் என்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்துள்ளார் நடிகர் விஜய். கோட் படத்தில் நடித்து வரும் விஜய் அந்த படத்தை முடித்த நிலையில், அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்கப் போகிறார். அதுதான் அவரது கடைசி படம் என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: மெட்ராஸ் படம் எடுத்துட்டா என்ன வேணாலும் பேசுவியா!.. பா. ரஞ்சித்துக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்!..
அதன் பின்னர் சினிமாவில் நடிக்காமல் இருந்தால் வெறும் அரசியலில் எப்படி விஜய் சம்பாதிப்பார் என்கிற கேள்வியும் எழுந்து வரும் நிலையில், பாண்டிச்சேரியில் பிரம்மாண்டமாக தியேட்டர் ஒன்றை விஜய் கட்டி வருவதாக கூறுகின்றனர்.
அதற்காகத்தான் அடிக்கடி விஜய் பாண்டிச்சேரிக்கு போய்விட்டு வருவதாக கூறுகின்றனர். சமீபத்தில், சென்னையில் உள்ள பட்டினப்பாக்கத்தில் பிரம்மாண்ட பெண்ட் ஹவுஸை நடிகர் விஜய் வாங்கியுள்ளதாக கூறப்பட்டது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் த்ரிஷா, ரம்பா, ஆர்யா, துல்கர் சல்மான் என ஏகப்பட்ட நடிகர்கள் வீடு வாங்கியிருப்பதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்கள்… கமல், ரஜினி, விஜய், அஜீத் எந்தெந்த இடம்னு தெரியுமா?
வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலருடன் நடித்து வருகிறார் விஜய். குடிய சீக்கிரமே பிரம்மாண்டமாக கட்சி மாநாட்டையும் நடத்தப்போகிறார் என்கின்றனர்.
புஸ்ஸி ஆனந்த் பாண்டிச்சேரியில் அரசியல் செய்து வந்த நிலையில், அவருடைய இடத்தில் தான் விஜய் தற்போது தியேட்டர் கட்டி வருவதாகவும் கூறுகின்றனர். ஆனால், விஜய் தியேட்டர் குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு விஷயங்களில் விஜய் அதிரடியாக இன்வெஸ்ட்மெண்ட் செய்து வருகிறார் என்கின்றனர்.
இதையும் படிங்க: பால்மேனியை காட்டி தமன்னாவுக்கு டஃப் கொடுக்கும் லாஸ்லியா!.. சும்மா அள்ளுது!…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…