தமிழ் சினிமாவில், ஏன் உலக சினிமாவில் கூட இந்த ஒரு புகாரை கண்டால் சற்று நிலைகுலைந்துதான் போவார்கள். ஆனால், ஏனோ இந்த செய்தி அண்மை காலங்களில் அதிகமாக வெளியில் வருகிறது. அது வேறு ஏதும் இல்லை மீடூ புகார் தான்.
முன்பு அரசல்புரசலாக இதனை வெளியில் சொன்னால் நமது பெயர் கெட்டுவிடுமோ என்று பெரும்பாலான பெண்கள் இருந்தனர். ஆனால் தற்போது அவர்கள் தைரியமாக தனக்கு இந்த மாதிரியான பாலியல் தொந்தரவுகள் நடந்துள்ளன என்பதை சமூகத்தில் வெளிப்படையாக கூறுகின்றனர். அவர்களது இந்த தைரியத்தை பாராட்டுவதா, இல்லை இந்த கொடுமை இன்னும் இந்த சமூகத்தில் நடக்கிறது என்பது வேதனைபடுவதா என்று தான் தெரியவில்லை.
தனியார் தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் நமக்கு பரிட்ச்சையமானவர் நடிகை ஜீவிதா. இவர் சீரியல் நடிகை, சினிமாவில் துணை நடிகை, தொகுப்பாளினி என்று பன்முகம் கொண்டவர். இவர் அண்மையில் ஒரு நேர்காணலில் தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு பற்றி கூறியுள்ளார்.
அதாவது, இவரை நடிக்கவைக்க ஒரு சினிமா பிரபலம் அழைத்துள்ளார். அவர் சில கண்டிஷன் போட்டுள்ளார். அது நீங்கள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். உடனே இவர் தெளிவாக கேட்டுள்ளார், என்ன அட்ஜஸ்ட்மெண்ட்? நடிப்பில் கவர்ச்சியாக நடிக்க வேண்டுமா? வேறு ஏதேனும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்கிறதா என்று விலாவாரியாக கேட்டுள்ளார்.
இதையும் படியுங்களேன் – நான் அந்த வயசுலயே எல்லாம் பாத்துட்டேன்.! ராஷி கண்ணாவின் மனதை உலுக்கிய கசப்பான சம்பவம்.!
அதற்கு அந்த நபர் இல்லை அட்ஜஸ்ட்மென்ட் என்றால் முதலில் நான் வருவேன், அடுத்த ஒளிப்பதிவாளர், அடுத்து இயக்குனர், அடுத்து தயாரிப்பாளர், அடுத்து ஹீரோ என வரிசையாக அடுக்கி கொண்டே போனார். இதற்கு ஒத்து கொண்டால் வாய்ப்பு தருகிறோம். என்று அவர் கூறினாராம். இதனை கேட்ட தொகுப்பாளினி மிரண்டு விட்டார்.
இது போதாதென்று மேலும் ,ஒரு அதிர்ச்சி செய்தியாக இது அத்தனையும் கேட்டது ஒரு தமிழன் தான் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்தான் என்று கூறி அதிர வைத்து விட்டார் நடிகை ஜீவிதா. இந்த மீடூ புகார்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இது எப்போது தான் முடியும் என்று அது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தான் தெரியும்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…