ரஜினி, அஜித் ரெண்டு பேரும் பெரிய ஸ்டார்ஸ்.. ஆனா சான்ஸே இல்ல!.. நெகிழும் மஞ்சு வாரியர்...

by Murugan |   ( Updated:2024-09-27 07:29:19  )
manju warrier
X

மஞ்சு வாரியர்

Manju warrier: மலையாளத்தில் அழகான மற்றும் சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டவர்களில் மஞ்சு வாரியரும் ஒருவர். பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர். 90களில் மலையாள சினிமாவை கலக்கியவர் இவர். நடிகர் திலிப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு திலீப்பிடமிருந்து விவகாரத்து பெற்றார். அதன்பின் திலீப் நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார். அதோடு, நடிகை பாவனா விஷயத்திலும் சிக்கி சிறைக்கு போனார். அந்த விவகாரம் மலையாள சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கணவரை பிரிந்தபின் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்க துவங்கினார். அப்படியே தமிழ் சினிமாவிலும் நுழைந்தார். வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதன்பின் அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு படத்தில் அவரின் தோழியாக நடத்தார்.

அப்போது அஜித்துடன் ஏற்பட்ட நட்பில் அவருடன் சேர்ந்து பைக்கும் ஓட்டப்போனார். அதாவது அஜித்தின் பைக் கேங்கில் இணைந்தார். சில இடங்களுக்கு அவரோடு பைக்கிலும் சென்றார். இப்போது ரஜினி நடித்துள்ள வேட்டையன் படத்திலும் அவரின் மனைவியாக நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமா பக்கமே வராதவர் தனுஷ், அஜித், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கிவிட்டார். எதிர்காலத்தில் தமிழில் இன்னும் நிறைய படங்களில் மஞ்சு வாரியார் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய மஞ்சு வாரியர் அஜித், ரஜினி ஆகியோருடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

ரஜினி, அஜித் இருவரும் பெரிய ஸ்டார்களாக இருக்கிறார்கள். ஆனாலும், மிகவும் எளிமையாக இருப்பார்கள். அவர்களிடம் எந்த பந்தவும் இருக்காது. நம்பவே முடியாத அளவுக்கு அடக்கமாக இருப்பார்கள். இந்த குணத்தை மற்றவர்கள் அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என புகழ்ந்து தள்ளியிருக்கிறார் மஞ்சு வாரியர்.

Next Story