அப்போ திரிஷா… இப்போ சமந்தா… நடிகைகளை புறக்கணிக்கிறதா தமிழ் திரையுலகம்?…

Tamil industry: நடிகை சமந்தா மீது அமைச்சர் தெரிவித்த பகீர் குற்றச்சாட்டு பிரபலங்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தெலுங்கு திரையுலகத்தின் ஒற்றுமை தமிழ் திரையுலகத்தில் மீது கேள்வியை எழுப்பி இருக்கிறது.

தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர் நடிகை சமந்தா விவாகரத்து குறித்தும் பாரத ரக்ஷா சமிதி தலைவர் கேடி ராமராவ் குறித்தும் பகிரங்கமாக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். இதில் நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து அவர் பேசியிருக்கும் விஷயம் சர்ச்சையானது.

இதைத் தொடர்ந்து நடிகை சமந்தா, அவருடைய முன்னாள் கணவரான நாத சைதன்யா, மாமனார் நாகார்ஜுனா என தொடர்ச்சியாக தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர். அவர்கள் மட்டுமல்லாது முன்னணி நடிகர்களான நானி, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி உள்ளிட்ட நடிகர்கள் தொடர்ச்சியாக சமந்தாவிற்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து இத்தகைய விஷயங்களை தெலுங்கு திரையுலகம் ஏற்றுக்கொள்ளாது என கண்டனங்களையும் பதிவு செய்து வந்தனர்.

அது மட்டும் அல்ல அது தொடர்ச்சியாக #FilmIndustryWillNotTolerate என்ற ஹேஷ்டாக்கும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. முக்கிய நடிகர்கள் அனைவருமே சமந்தாவிற்கு ஆதரவாக தங்களுடைய பதிவை உடனுக்குடன் போட்டிருப்பது தெலுங்கு திரை உலகத்தின் ஒற்றுமையை காட்டுகிறது.

இதே போல் லியோ படத்தின் வெளியீட்டு சமயத்தில் நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய அவதூறு வீடியோ இணையத்தில் வைரலானது. ஆனால் குறிப்பிட்ட சில பிரபலங்களை தவிர முன்னணி பிரபலங்கள் வாய் திறக்காமல் இருந்தது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்படத்தில் திரிஷாவுடன் இணைந்து நடித்த நடிகர் விஜய் கூட அதற்கு எதிர்த்து கண்டனத்தை தெரிவிக்கவில்லை. ஆனால் இதற்கு நேர்மாறாக தெலுங்கு திரை உலகமே சமந்தாவிற்காக களமிறங்கி இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகைகளுக்கு தெலுங்கு திரை உலகம் கொடுக்கும் ஆதரவை ஏன் தமிழ் திரையுலகம் கொடுக்க மறுக்கிறது என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

Related Articles
Next Story
Share it