சும்மா இல்லாம பாலிவுட் போய் வசமா சிக்கிட்டாரே!... அட்லீயின் தயாரிப்பில் அடி வாங்கும் பேபி ஜான் வசூல்…

by Akhilan |
பேபி ஜான்
X

பேபி ஜான் 

Atlee: பாலிவுட்டில் படம் இயக்கிய இயக்குனர் அட்லீக்கு முதல் படமே மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படம் நல்ல அளவிலான வரவேற்பை பெற்றாலும் அவரை காப்பிகேட் இயக்குனர் என ரசிகர்கள் கலாய்த்து வந்தனர்.

அந்த படத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக தளபதி விஜய் உடன் மூன்று படங்களை இணைந்து இயக்கி இருந்தார். மூன்று படங்களுமே வசூலில் வேட்டை நடத்தி இருந்தாலும், ரசிகர்களின் கேலிப் பேச்சுக்கு தப்பவில்லை.

இருந்தும் அட்லீ தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே இருந்தார். பாலிவுட் ஜாம்பாவானான ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தினை இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

ஆயிரம் கோடி வசூலை குவித்த இத்திரைப்படம் பல படங்களிலிருந்து அட்லீ காப்பி எடுத்து இருப்பதாகவும் ரசிகர்கள் கலாய்த்து வந்தனர். இதுகுறித்து ஒரு பேட்டியில் இயக்குனர் அட்லீ, நான் எப்போதும் காப்பியடிப்பதில்லை. என்னுடைய பட காட்சிகள் இன்னொரு காட்சிகளின் இன்ஸ்பிரேஷன் ஆக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

தொடர்ச்சியாக தற்போது அட்லீ தென் இந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க இயக்குனர் அட்லீ, பேபி ஜான் திரைப்படம் மூலம் தயாரிப்பாளர் அட்லீயாக ப்ரோமோஷன் வாங்கினார். தமிழில் அவர் தளபதி விஜய் மற்றும் சமந்தாவை வைத்து இயக்கிய தெறி திரைப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்தார்.

வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தாலும் வசூலில் பெரிய அடி வாங்கி இருக்கிறது. 80 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 12 கோடி மட்டுமே எனக் கூறப்படுகிறது.

தொடர்ந்து இரண்டாம் நாளில் நான்கு கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் படத்தின் பட்ஜெட்டையாவது எடுக்க முடியுமா என தற்போது தயாரிப்புக் குழு மிகப்பெரிய வருத்தத்தில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

Also Read: கேப்டன் விஜயகாந்த் தவற விட்ட பிளாக்பஸ்டர் படங்கள்... லிஸ்ட்ல இவ்ளோ இருக்கா?

Next Story