இதுக்கு மேல கல்யாணம் பண்ணி என்னத்த பண்ண போறாங்க... வனிதாவை பங்கம் பண்ண பயில்வான்...!
தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான நடிகையாக வலம் வருகின்றார் வனிதா விஜயகுமார். பலம்பெரும் நடிகரான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகளாக சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் வனிதா விஜயகுமார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் பின்னர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
திருமணத்திற்கு பிறகு விவாகரத்து, மீண்டும் ஒரு திருமணம், சொத்து பிரச்சனை, தந்தையுடன் சண்டை என்று சர்ச்சை நாயகியாகவே மாறி இருந்தார் வனிதா. அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான இவர் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, சீரியல் என்று பிஸியாக வலம் வந்தார். தற்போது வெள்ளித்திரையில் ஏகப்பட்ட திரைப்படங்களில் கமிட்டாகி தொடர்ந்து நடித்து வருகின்றார்.
இவர் கடைசியாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். பின்னர் அவரையும் விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார். பீட்டர் பால் சமீபத்தில் தான் உயிரிழந்தார். இந்நிலையில் மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சலசலப்பை உருவாக்கி இருக்கின்றார் வனிதா. பலமுறை திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார் மீண்டும் ஒருமுறை திருமணம் செய்யப் போகிறார் என்று தகவல் வெளியாகி இருந்தது.
அதற்கேற்ற வகையில் வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரும் ப்ரபோஸ் செய்வது போல் போஸ் கொடுத்து சேவ் த டேட் என்று அக்டோபர் 5-ம் தேதியை தெரிவித்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பி வந்தார்கள். மேலும் இந்த புகைப்படம் மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்ற திரைப்படத்தின் ப்ரமோஷன் என கூறப்பட்டு வருகின்றது. எதுவாக இருந்தாலும் அக்டோபர் 5-ம் தேதி தெரியவரும் என்று கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் வனிதா விஜயகுமாரின் திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கிண்டலாக பேசியிருக்கின்றார். சமீபத்தில் அப்பு என்ற திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாரின் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இந்த நிகழ்ச்சிக்கும் அந்த கேள்விக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா என்று கூறினார். உடனே பத்திரிகையாளர்கள் அவரிடம் நீங்கள் வனிதாவோட நன்ன நண்பர் ஆயிற்றே என்று கூற, பதிலளித்த அவர் இது குறித்து அவரிடம் நான் கேட்டேன்.
அவர் படத்தின் ப்ரோமோஷன் தான் என்று கூறியிருந்தார். மேலும் இவர்கள் இருவரும் ஏற்கனவே ஒருமுறை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அந்த திருமணத்தையும் அவர் படத்தின் ப்ரோமோஷன் என்று தான் கூறினார். ஒருவேளை இப்போது உண்மையாக இருக்கலாம். பின்னர் அதனை மாற்றி கூறலாம் என்று கூறினார். 50 வயசுல கல்யாணம் பண்ணி அவங்க என்ன பண்ண போறாங்க என்று கிண்டலாக பதில் அளித்தார். இதை கேட்ட அனைவரும் சிரித்து விட்டனர்.