விஜயகாந்த் விஷயத்துலயே பலத்த அடி... விஜய்கிட்ட தப்புவாரா வடிவேலு? பயில்வான் பதிலோ வேற!

'வைகைப்புயல்' என்று அழைக்கப்படும் வடிவேலு முன்பு விஜயகாந்துக்கு எதிராக அரசியலில் கருத்து சொன்னார். நிலைமை என்னானதுன்னு உங்களுக்கே தெரியும். இப்பதான் வடிவேலு அந்த சர்ச்சையில் இருந்து மீண்டு ரெண்டு மூணு படங்கள் நடிச்சிட்டு வர்றாரு. இப்போ விஜய் விஷயத்துல கருத்து சொல்றாரு. இதுக்கு பதில் எப்படி இருக்கும் என்று பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
விஜயகாந்தும், கமலும் தான் வடிவேலுவோட ஆரம்பகால வளர்ச்சில முக்கிய பங்கு வகித்தார்கள். இரண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு படங்களைக் கொடுத்தாங்க. வடிவேலுவுக்கு முதல்ல திமிரு கொஞ்சம் அதிகமாச்சு. நம்ம விட்ட வேற ஆளு கிடையாதுங்கற எண்ணம் வந்துடுச்சு.
புரொடியூசரை அலைக்கழிச்சாரு. இயக்குனர்களை அலைக்கழிச்சாரு. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கராலயே வடிவேலுவை சமாளிக்க முடியல. ஏற்கனவே வடிவேலு விஜயகாந்துடன் சொந்த பிரச்சனையை அரசியலாக்கி சர்ச்சையில் சிக்கியவர். இப்பவும் விஜய் மீது அரசியல் ரீதியா பதில் சொல்றது சர்ச்சையாகி இருக்கு. வடிவேலுவைப் பொருத்தவரை அவரு இனிமே சம்பாதிச்சித்தான் வாழணும்னு இல்லை.
ஆர்.வி.உதயகுமார் எழுதி இயக்கிய சின்னக்கவுண்டர் படத்துல வடிவேலுவுக்கு 2 சீன்தான் கொடுத்தாங்க. ஆனா விஜயகாந்த் நம்மூரு காரன்னு சொல்லி அதிகமா சீன்களைக் கொடுத்தாரு. 10வருஷத்துக்கு முன்னாடி விஜயகாந்தோட சொந்த சகோதரி இறந்து போயிட்டாங்க. துக்கம் விசாரிக்க வந்தவங்க காரை நிறுத்தி இருந்தாங்க. விஜயகாந்து வீட்டுக்குப் பக்கத்துல தான் வடிவேலு வீடு. அது சின்ன பிரச்சனை தான். அந்த தனிப்பட்ட பகையை வடிவேலு அரசியல் பகையா மாத்திட்டாரு.
அது வடிவேலுவுக்குத்தான் பின்னடைவா ஆனது. அவருக்குப் படங்கள்ல நடிக்குற வாய்ப்பு இல்லாமப் போச்சு. இப்போ திமுகவோடு சேர்ந்துக்கிட்டு விஜயைப் பற்றி பேசுவது அவரது உரிமை. அவரது சுதந்திரம். இனிமே அவருக்கு நடிச்சித்தான் சம்பாதிக்கணும். சோறு சாப்பிடணும்னு இல்லை. ஆனா அவரு விஜயைப் பற்றி அரசியல் ரீதியா பதில் சொல்றது தப்புன்னு சொல்லமாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.