பாலாவை புறக்கணித்த விக்ரம்!.. விஷால் எங்க போனாரு?.. புட்டுப்புட்டு வைத்த பிஸ்மி..

by Ramya |
bismi
X

bismi 

பாலா 25: தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான இயக்கத்தின் மூலமாக பிரபல இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் பாலா. இவர் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளான நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் பிரம்மாண்ட விழா ஒன்று நடத்தப்பட்டது. இந்த விழா பாலா 25 மட்டும் இல்லாமல் வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவாகவும் நடைபெற்றது.


இந்த விழாவில் பல இயக்குனர்கள், நடிகர்கள் கலந்து கொண்டு பாலா குறித்து நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பாலாவால் முன்னுக்கு வந்த அவரது திரைப்படங்களில் நடித்து மிகப் பிரபலமான நடிகர்களான விக்ரம், விஷால், ஆர்யா போன்ற நடிகர்கள் வராது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். இந்த கேள்விக்கு சினிமா விமர்சகர் பிஸ்மி பதில் அளித்து இருக்கின்றார்.

பிஸ்மி பேட்டி: தனியார் youtube சேனலுக்கு பேட்டி அளித்திருந்த சினிமா விமர்சகர் பிஸ்மி பாலா 25 நிகழ்ச்சி குறித்து பேசி இருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'தமிழ் சினிமாவில் தற்போது போலியாக பல பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதற்கு மத்தியில் பாலாவிற்கு இது போன்ற ஒரு பாராட்டு விழா எடுத்தது சிறந்த விஷயமாக பார்க்கப்படுகின்றது.

பாலா தமிழ் சினிமாவின் பெருமை மிகுந்த அடையாளத்தில் ஒருவர். யாரும் எடுக்க நினைக்காத கதையை படமாக்கி அதன் வெற்றி பெற்று ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குனராக இருந்து வருகின்றார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் இவரால் வளர்ந்த பல நடிகர்கள் வராமல் இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

நடிகர் விக்ரமை எடுத்துக் கொண்டால் சேது படத்திற்கு முன்பு வரை பல உப்புமா படங்களில் நடித்து வந்தார். ஆனால் சேது படம் தான் அவருக்கு ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தியது. சேது படத்தின் பிரிவியூ காட்சிகள் மட்டும் ௧௦௦ நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது. ஏனென்றால் படத்தை வாங்கும் விநியோகிஸ்தர்கள் படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இல்லை என்று கூறிவிட்டு சென்று விடுவார்கள் .

அதன் பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு இந்த படத்தை திரையரங்குகளில் வெளியாகி வெற்றி படமாக மாறியது. இப்படத்தின் மூலமாக தான் நடிகர் விக்ரம் தற்போது இவ்வளவு பெரிய நடிகராக வளர்ந்து இருக்கின்றார். ஆனால் அவர் இந்த விழாவிற்கு வரவில்லை. குடும்பத்துடன் வெளிநாடு சென்று விட்டதாக கூறுகிறார்கள். இப்படி ஒரு நிகழ்ச்சி பாலாவுக்கு நடக்கின்றது என்பதை தெரிந்தும் விக்ரம் கலந்து கொள்ளாதது ஆச்சரியமாக இருக்கின்றது.

அதேபோல் தான் நடிகர் விஷால் அவருக்கு பாலா 25 நிகழ்ச்சிக்கான இன்விடேஷனை கொடுப்பதற்கு முயற்சி செய்தபோது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. போன் சுவிட்ச் ஆப்பாக இருந்தது. அவர் எங்கு இருக்கிறார் என்பது அவருக்கு நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்குமே தெரியவில்லை. ஒரு நடிகர் சங்கத்தின் தலைவராக இருப்பவர் இப்படியா இருப்பது.

அதேபோல் ஆர்யாவை நான் கடவுள் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் மிகச்சிறந்த நடிகராக மாற்றினார். அப்படி தன் திரை வாழ்க்கைக்கு அடித்தளமாக இருந்த பாலாவின் நிகழ்ச்சிக்கு வராமல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றுவிட்டார் நடிகர் ஆர்யா. இதில் சூர்யாவை மட்டும் நாம் பாராட்டியே ஆக வேண்டும்.


என்னதான் வணங்கான் திரைப்படத்தின் மூலமாக பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே மனக்கசப்பு இருந்தாலும் அதையெல்லாம் தூக்கி போட்டுவிட்டு இந்த நிகழ்ச்சிக்காக வந்திருக்கின்றார். இதில் மற்றொரு விஷயமும் இருக்கின்றது. என்னவென்றால் இந்த நிகழ்ச்சியில் ஒரு வேலை சூர்யா கலந்து கொள்ளவில்லை என்றால் நிச்சயம் சமூக வலைதள பக்கங்களில் அவரை கண்டபடி திட்டி இருப்பார்கள்.

பாலா மூலமாக வளர்ந்த நடிகர் சூர்யா இப்படி அவரின் நிகழ்ச்சிக்கே வரவில்லை என்று திட்டி தீர்த்திருப்பார்கள். ஏற்கனவே கங்குவா திரைப்படத்தின் தோல்வி காரணமாக மன உளைச்சலில் இருக்கும் சூர்யா இதுபோன்ற பிரச்சனைகளிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்பதற்காக சாமர்த்தியமாக யோசித்து இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கின்றார்' என்று அந்த பேட்டியில் பிஸ்மி பகிர்ந்து இருக்கின்றார்.

Also Read: அவரு நோ சொல்லிருக்க மாட்டாரு.. நயன்தாரா வழியே தப்பா இருக்கு!.. என்ன இப்படி சொல்லிட்டாரு..

Next Story