அதிகரிக்கும் சர்ச்சை... இந்தியன் 3 வெளியாகுமா? அப்டேட் கொடுத்த பிரபலம்

இந்தியன் 3 படம் வெளிவருமா, வராதா என பிரபல தயாரிப்பாளர்களான சித்ரா லட்சுமணனும், தனஞ்செயனும் உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து பேசுகின்றனர். அப்போது அவர்கள் பகிர்ந்த தகவல்கள் தான் இவை. வாங்க பார்க்கலாம்.
படம் வெளியாகுமா?: இந்தியன் 3 படத்தைப் பொருத்த வரைக்கும் திரையரங்குகளில் வெளியாகுதா, ஓடிடியில் வெளியாகுதான்னு சர்ச்சை எழுந்தது. அதனால படம் வெளியாகுமான்னு கேள்வி எழுகிறது. அதுக்கு முக்கியமான காரணம் அந்தப் படத்துக்கு ஆகற செலவு.
200 கோடி: அந்தப் படத்துக்கு சம்பளமாக ஷங்கருக்கு 60 கோடி தர வேண்டியது இருக்காம். கமலுக்கு 50 கோடி தர வேண்டி இருக்குதாம். இது போக ஏறக்குறைய 15ல இருந்து 20 நாள்கள் படப்பிடிப்பு இருக்கு. அதுக்கு 60 கோடி செலவுன்னும் திட்டமிட்டு இருக்காங்களாம்.
இந்தத் தொகையைக் கூட்டுனாலே 170 கோடி வந்துடுது. இதுக்கு மேல பட புரோமோஷன் எல்லாம் சேர்த்தா 200 கோடி வந்துடும். இப்ப அந்தப் படத்தைப் பொருத்த வரைக்கும் அது 200 கோடியை வசூல் செய்யுமான்னு மிகப்பெரிய கேள்விக்குறி இருக்கு. அதுக்குக் காரணம் இந்தியன் 2 படத்தோட தோல்விதான்.
அதனால அந்தப் படம் வெளிவருமாங்கறது மிகப்பெரிய சந்தேகமா இருக்கு என பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
மனம் உவந்து பண்ணுனா: இந்தியன் 2வை நெட்பிளிக்ஸ் வாங்கிருக்காங்க. இந்தியன் 3க்கும் அவங்க கிட்ட ஸ்டேன்டிங் ஆஃபர் இருக்கு. டிஜிட்டல், சேட்டிலைட் ரெண்டுலயும் இருக்கு. ஆனா அது எந்த அளவு கவர் பண்ணும்னு தெரியாது. இதெல்லாம் பேச்சுவார்த்தையில் குறைக்க முடியும்.
இந்தியன் 2, 3 படங்கள் வர்றதுக்கு லைகா நிறுவனத்துக்கு ஷங்கர், கமல் எல்லாரும் ஆதரவு கொடுத்தால் நல்லாருக்கும். இந்தப் படத்துல நீங்க ஜெயிச்சிடுங்க. அடுத்து நாம ஒரு படம் பண்ணலாம். வாங்கிக்கறேன்னு மனம் உவந்து பண்ணுனா இன்டஸ்ட்ரிக்கு நல்லது.
இவ்ளோ தூரம் சுபாஷ்கரன் சார் ஒரு படத்தை எடுத்து நஷ்டம் ஆகிருக்காரு. எல்லாருக்கும் பெரிய அளவில சம்பளம் கொடுத்து வேலையும் கொடுத்துருக்காரு. அவங்களுக்காக செய்ற இது குறைந்தபட்ச சப்போர்ட் தான். இந்தியன் 3 படத்தோட கன்டென்ட்ல வெற்றி இருக்கு.
பிரம்மாஸ்திரம்: இதுதான் அவருக்கு பிரம்மாஸ்திரம். அப்போ தான் பெரிய பட்ஜெட்ல 1000 கோடில வேள்பாரி எடுக்க முடியும். அதுக்கு கண்டிப்பா இந்தியன் 3 ஐ வெற்றியாக்கணும். எனக்கு தெரிஞ்சி கண்டிப்பா ஷங்கர் சார் அதுக்கான வேலைகளை செஞ்சி வெற்றியைக் கொடுப்பாரு. வெளியே கொண்டு வந்துருவாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.