தக் லைஃப் படத்தின் தோல்விக்கு முதல் காரணம் யாரு? இட இப்படி யாருமே விளக்கம் கொடுக்கலப்பா!

by SANKARAN |
mutha mazhai song
X

மணிரத்னம் இயக்கத்தில் இந்த மாதத்தின் துவக்கத்தில் ஜூன் 5ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் தக் லைஃப் படம் ரிலீஸ் ஆனது. படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தும் வரவேற்புதான் கிடைக்கவில்லை. என்னதான் காரணம் என்றால் மணிரத்னம் கமல் இருவரும் 38 ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்து நாயகன் படத்தை எடுத்து மெகாஹிட் கொடுத்தார்கள்.

அவர்களே மீண்டும் இணைகிறார்கள். கண்டிப்பாக இது அதைவிட பேசப்படும் வகையில் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் படத்தைப் பார்க்கச் சென்றனர். ஆனால் அது முதல் ஷோவிலேயே எதிர்பார்ப்புகள் அத்தனையையும் தவிடுபொடியாக்கி விட்டது. இதனால் படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் வந்து குவிந்தன.

சமூகவலைதளத்தில் மணிரத்னத்தைப் போட்டுப் பொளந்து கட்டினர். இதற்கிடைய படத்திற்கு நல்ல புரொமோஷன், கமலின் கன்னட மொழிப் பேச்சால் கடும் சர்ச்சை என படம் வெளியானது. ஆனால் இப்படி ஆகிவிட்டதே என்று கமல் ரசிகர்கள்கூட அங்கலாய்த்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் அத்தனைப் பாடல்களும் சூப்பர். முத்தமழை பாடல் படத்தில் இல்லாததைக் குறையாகச் சொன்னார்கள்.

அதனாலோ என்னவோ சமீபத்தில் பாடலை மட்டும் யூடியூப்பில் வெளியிட்டனர். அதற்கும் கலவையான விமர்சனம் வந்தது. நல்லவேளை படத்தில் இந்தப் பாட்டை வைக்கலன்னும் சொன்னார்கள். இது இப்படி இருக்க படத்தின் தோல்விக்கு முதல் காரணம் யார் தெரியுமா? கேட்டா அசந்துருவீங்க. பிரபலம் கொடுத்த விளக்கத்தைப் பாருங்க.


தக் லைஃப் படத்தின் தோல்விக்கு யார் காரணம்? கமல்ஹாசனா அல்லது மணிரத்னமான்னு ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனல் ஒன்றில் இப்படி பதில் அளித்துள்ளார்.

தக் லைஃப் படத்தின் தோல்விக்கு முதல் காரணம் யாருன்னா நீங்க தான். நீங்க அந்தப் படத்தைப் பார்க்கல. அதன்காரணமாகத் தான் தோல்வி அடைந்தது. இரண்டாவது காரணம் என்னன்னா நீங்க அந்தப் படத்தைப் பார்க்க வரும்படி அதன் திரைக்கதை அமையவில்லை அது இரண்டாவது காரணம் என்று பதில் அளித்துள்ளார் சித்ரா லட்சுமணன்.

Next Story