10லட்சத்தை வாங்கிட்டு 4 மணி நேரம் நடிச்சா என்ன பண்றது? வடிவேலுவை பொளக்கும் பிரபலம்
தமிழ்சினிமா உலகின் காமெடி நடிகர்களைப் பற்றி பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...
விவேக்: ரன் படத்துல காக்கா பிரியாணி, சாக்கடை கூவம் நாத்தம் நாறுதுன்னு சொல்லி காமெடி அடிப்பாரு விவேக். அவரு வேற ரூட். சின்னக்கலைவாணர்னு சொல்வாங்க. வடிவேலு பாடிலாங்குவேஜ்லயே காமெடியைக் கொண்டு போவாரு.
சந்தானம், சூரி: கவுண்டமணிக்கு டயலாக் பேசுறதுதான் காமெடி. செந்திலை உதைக்கிறது அப்படியே திட்டுறதுன்னு கொண்டு போவாரு. சந்தானம் கவுண்டர் கொடுத்து காமெடி அடிக்கிறவரு. அது தனி ரூட். சூரிக்கு பெரிசா காமெடின்னு சொல்ல முடியாது. பரோட்டா சாப்பிறது தான். அது கூட பெரிய அளவில் சொல்ல முடியாது.
யோகிபாபு: வடிவேலு மாதிரி காமெடி நடிகர்கள் அந்தக் காலத்துல நிறைய பேரு இருந்தாங்க. சுருளிராஜன், தேங்காய்சீனிவாசன்னு சொல்வாங்க. எம்.ஆர்.ராதா வந்து அப்படி டயலாக் பேசுவாரு. கிளாப்ஸ் வாங்கிட்டுப் போய்க்கிட்டே இருப்பாரு. எல்லாமே பொருளா, கருத்தா, அட்டாக் பண்ணியும் பேசுவாரு.
ஆயிரம் பொருள் இருக்கும். சிரிக்கவும் செய்யலாம். இந்த அட்ராசிட்டி என்பது வடிவேலு மட்டும் பண்ணல. எல்லா நடிகர்களும் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. யோகிபாபுவைப் பொருத்த வரை அவர் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரிக்கல.
பீல்டுல வெற்றிடம்: அவரு கூட செட்ல வந்து நான் நடிக்கிறதுதான் காமெடி. இன்டஸ்ட்ரில என்னை விட்டா காமெடிக்கு ஆளு இல்லங்கறாரு. ஏன்னா பீல்டுல வெற்றிடம் ஆகிப்போச்சு. எந்தக் காமெடி நடிகரும் ஹீரோவா மாறி தொடர்ந்து வெற்றிகரமா இருந்தது இல்லை.
சந்தானம், வடிவேலு, யோகிபாபு, சூரி என எல்லாரும் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. சந்தானம் ஹீரோவா நடிச்சி படம் ஓடுது. ஆனால் அதுல ஸ்திரத்தன்மை இருக்கா?
நாலு மணி நேரம்: நல்ல காமெடி நடிகர்கள் ஒரு ஸ்டேஜ்க்கு மேல ஹீரோ ஆசை வந்து தன்னோட ஒரிஜினாலிடியை இழந்துடறாங்க. 10லட்சத்தை வாங்கிட்டு வடிவேலு நடிக்க வர்றது 12.30 மணிக்கு. வந்தா ஒரு மணிக்கு பிரேக். சீன் மட்டும் அசெம்பிள் பண்ணுவாரு. பிரேக்ல கேரவன் போறது. சாப்பிடுறது. தூங்கறது. 3 மணிக்கு வருவாங்க.
அப்புறம் ஒன்றரை மணி நேரத்துல என்ன எடுப்பீங்க? 8மணி நேரம் நடிக்கிறதுக்கு 10 லட்சம் வாங்கிட்டு நாலு மணி நேரம் நடிக்கலாமா? தயாரிப்பாளர் என்ன பண்ணுவாரு? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.