
Review
Coolie: கூலி படத்தின் பெரிய ’மைனஸ்’… ரஜினியோட பிளஸே இதுதானே? 1000 கோடி கல்லா கட்டுமா?
Coolie Movie Review: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் நிலையில் வசூலை பாதிக்கும் பெரிய விஷயம் நடந்து வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்தில் ரஜினிகாந்த், ஷொபீன், நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்டோர் முன்னணி வேடத்தில் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பு செய்திருக்கிறார்.
மேலும், இப்படத்தின் மோனிகா, சிக்கிடு பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பிரபல நடிகர்களுக்கு முக்கிய வேடம் என்பதால் இப்படம் 1000 கோடியை எட்டும் என்பது பலரின் கருத்தாக இருந்தது.
ஆனால், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதுமே குடும்ப ரசிகர்களால் அதிகமாக விரும்பப்படுபவர். அதனால் அவருடைய படங்களுக்கு வார இறுதி கூட்டத்தில் அதிகமாக குடும்பமே பார்க்க வந்திருப்பார்கள். இதனால் எப்போதுமே படம் ஹவுஸ்புல்லாக இருக்கும்.

ஆனால் இந்த முறை ரஜினிகாந்த் படத்துக்கு முதல்முறையாக சென்சாரில் ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதனால் 18 வயதுக்கு கீழ் இருப்பவர்களை திரையரங்கில் கண்டிப்பாக உள்ளே விடமாட்டார்கள். அதிலும் பெரிய மால் இதை கண்டிப்பாக பாலோ செய்யும்.
அதனால் குடும்ப ரசிகர்கள் இந்த முறை குறையும் என்பதே கருத்தாக இருக்கிறது. இதன் காரணமாக முதல் நாள் டிக்கெட் விற்பனை கூட மூன்றில் ஒரு மடங்கு குறைவு தான் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இது தொடரும் பட்சத்தில் இரண்டு வாரம் கூட படம் தியேட்டரில் தாக்குபிடிப்பதும் கஷ்டமாகவே இருக்கும் என்ற பேச்சு எழுந்துள்ளது.