கேப்டனுக்கு டிரிபியூட்டுனா இதுதான்! ‘லப்பர் பந்து’ டீம் செய்த நெகிழ்ச்சியான சம்பவம்
சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்த லப்பர் பந்து திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் பெரிய அளவில் திருப்திப்படுத்தி இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அட்டகத்தி தினேஷ் நடிக்கும் திரைப்படமாக இந்த லப்பர் பந்து திரைப்படம் அமைந்தது.
உண்மையிலேயே விஜயகாந்த் ரசிகரான அட்டகத்தி தினேஷ் இந்தப் படத்தில் விஜயகாந்த் ரசிகராகவே நடித்திருப்பார். உள்ளூரில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் அதிரடியாக கிரிக்கெட் விளையாடிய ஒரு ஆட்டக்காரராக அட்டகத்தி தினேஷ் நடித்திருக்கிறார்.
எங்கு கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் தவறாமல் ஆஜராகி விடுவார். இன்னொரு பக்கம் சொந்த கிராமத்தாலேயே ஜாதியை காரணம் காட்டி ஹரிஷ் கல்யாணை ஒதுக்கி வைக்க கிரிக்கெட் மீது உள்ள மோகத்தால் ஹரிஷ் கல்யானும் கிரிக்கெட் ஆட வருவார். ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இருவருமே கிரிக்கெட் வெறியர்களாக இந்த படத்தில் நடிக்க ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஆன ஒரு ஈகோ வளர்கிறது.
அது மட்டுமல்ல அட்டகத்தி தினேஷின் மகளை தான் ஹரிஷ் கல்யாண் காதலிக்க ஆரம்பிப்பார். அதன்பிறகு இருவருக்குமான ஈகோ எப்படி உடைகிறது என்பதை பற்றி விளக்கும் படம் தான் லப்பர் பந்து. படத்தில் கிராமங்களில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் ஏற்படும் சாதி வேறுபாட்டை போகிற போக்கில் அழகாக காட்டி இருப்பார் படத்தின் இயக்குனர்.
இரு கிரிக்கெட்டர்களுக்கும் இடையேயான ஈகோ தான் கதை என்றாலும் பெண் கதாபாத்திரங்கள் சந்திக்கும் பிரச்சினையையும் இந்த படம் பேசியிருக்கும். படத்தின் ஹைலைட்டே அட்டகத்தி தினேஷின் அறிமுகம் தான். அவரை அறிமுகப்படுத்தும் விதம் அனைவரையும் உற்சாகப்படுத்தியது.
ஏனெனில் பேக்ரவுண்டில் விஜயகாந்த் நடித்த பொட்டு வச்ச என் தங்க குடம் பாடல் ஒலிக்க கெத்தா வந்து தன் முகத்தை காட்டியிருப்பார் அட்டகத்தி தினேஷ். இந்தப் படத்தில் அவரை கெத்து என்றுதான் அழைப்பார்கள். அவருடைய மோட்டார் பைக்கிலும் முன்னாடி விஜயகாந்தின் போட்டோவைத்தான் ஒட்டி இருப்பார் அட்டகத்தி தினேஷ்.
படத்தின் கதை ஒரு பக்கம் ரசிகர்களை கவர்ந்தாலும் விஜயகாந்தின் அந்த எண்பதுகளில் வெளியான பாடல் ஒலித்தது அனைவருக்கும் ஒரு புத்துணர்வை ஏற்படுத்துவது மாதிரியான உணர்வை தந்தது .விஜயகாந்துக்கான ஒரு ட்ரிபியூட் படமாகவே இது பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் படம் வெளியாகி இன்று வரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்த வெற்றியை ஒட்டுமொத்த பட குழுவும் கொண்டாடி வருகிறார்கள். அதில் ஒரு நிகழ்வாக லப்பர் பந்து படத்தின் மொத்த டீமும் இன்று விஜய்காந்தின் நினைவிடத்திற்கு சென்று அவருக்கு மலர் வளையம் செலுத்தி வணங்கி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் அவருடைய அலுவலகத்திற்கும் சென்று பிரேமலதாவையும் சந்தித்து தங்களுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்திருக்கிறார்கள்.
இதோ அந்த வீடியோ லிங்க்; https://www.instagram.com/reel/DAYcQEGPnCB/?igsh=dTkzazViNjFpN3Ri