ஜெய்லர் படத்துக்கு 5 விருதுகள்.... ஆனா தலைவருக்கு ஒண்ணு கூட கிடைக்கலையே... என்னாச்சு?

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் சைமா (SIIMA) என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இது தென்னிந்திய திரைப்படத் துறையின் கலை மற்றும் தொழில்நுட்ப சாதனைகளைக் கௌரவித்து ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் சினிமாக்களில் சிறந்த கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் 12வது தென்னிந்திய சினிமா விருதும் வழங்கப்பட்டது. அந்த லிஸ்ட் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.


சைமா விருதுகளில் ஜெய்லர் படம் 5 விருதுகளை வாங்கியுள்ளது. ஆனால் ரஜினிக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. இதுக்கு முன்னாடி ரஜினிகாந்த் சைமா விருதை வாங்கியிருக்கிறாரான்னு ஒரு வாசகர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இது தான்.

ஜெய்லர் படம் மிகப்பெரிய வெற்றிப்படம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ரஜினிகாந்தோட நடிப்புக்கு முழு தீனி போட்ட படமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன். சிறந்த நடிகருக்கான சைமா விருதை ரஜினி இதுவரை பெறவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஜெய்லருக்கு 5 சைமா விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த படம், சிறந்த துணை கதாபாத்திரத்திற்கு வசந்த் ரவி, சிறந்த இயக்குனர் நெல்சன் திலீப்குமார், சிறந்த இசை அமைப்பாளர் அனிருத், சிறந்த காமெடியன் யோகிபாபு என 5 விருதுகள் கிடைத்துள்ளது.

இதுபற்றி மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது ஆதங்கத்தைக் குறிப்பிட்டுள்ளார். வசந்த்ரவிக்கு சிறந்த துணை கதாபாத்திரத்துக்கான விருது கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது விக்ரமுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ரஜினி சிறந்த நடிகர் இல்லையா? அல்லது விஜய் சிறந்த நடிகர் இல்லையா என்றும் நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கொடுக்கப்பட்டுள்ளது.

அதுவும் பலத்த சர்ச்சைக்குள்ளான அன்னபூரணி படத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது? இதெல்லாம் எந்த வகையில் நியாயம்? பணம் கொடுத்தா விருதுகளை வாங்குகிறார்கள்? அந்த அளவுக்கு விருதுகளின் தரம் கெட்டுப் போய்விட்டதா என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it