தமிழ் நடிகர்களுக்கு ஒரு நியாயம்… தெலுங்கு நடிகருக்கு நியாயமா? கமலால் புகையும் திடீர் பிரச்னை…

by AKHILAN |
தமிழ் நடிகர்களுக்கு ஒரு நியாயம்… தெலுங்கு நடிகருக்கு நியாயமா? கமலால் புகையும் திடீர் பிரச்னை…
X

Actor: பொதுவாக தெலுங்கு, கன்னட நடிகர்களை அதிகமாக விமர்சிக்கும் வகையில் தமிழ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் செய்வது தான் வழக்கம். ஆனால் இந்த முறை கமல்ஹாசனால் தெலுங்கு நடிகர்கள் அந்த விஷயங்களை கையில் எடுத்துள்ளனர்.

தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் நடிப்பை பெரிய வகையில் தமிழ் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் கூட அவரும் ஊர்வசி ராவ்டேலா இருவரும் ஆடிய நடனம் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் மெட்டிரியலாக மாறியது. பாலகிருஷ்ணாவுக்கு இந்த விஷயம் தேவையா எனவும் கேள்வி எழுந்தது.

இந்நிலையில் நேற்று தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் ஒரு பக்கம் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசனின் நடிப்பு பெரிய அளவில் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

அதே வேளையில், இப்படத்தில் சிம்பு மற்றும் திரிஷா இருவரும் தான் ஜோடி எனக் கருதப்பட்ட நிலையில் கமல்ஹாசனின் இன்னொரு ஜோடியாக தான் திரிஷா நடித்து இருப்பதே டிரெய்லரில் உறுதியாகி இருக்கிறது. தக் லைஃபின் புரோமோஷன் மீட்டில் திரிஷா மீண்டும் ஒருமுறை விண்ணை தாண்டி வருவாயா ஜோடியை பார்க்க முடியும் எனப் பேசுவார்.

அப்போதே சிம்பு ஒருமாதிரியாக லுக் விடுவார். ஆனால் நேற்று டிரெய்லரில் தான் அந்த விஷயம் உடைந்தது. ஒரே நேரத்தில் கமல்ஹாசனுக்கு இப்படத்தில் இரண்டு ஜோடிகள் எனவும் ரசிகர்கள் ஆச்சரியமாக பேசி வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கு ரசிகர்கள் இதே போல 70 வயது தெலுங்கு நடிகர்கள் ஒரு படத்தில் 40 வயது நடிகையுடன் லிப் கிஸ் இன்னொரு 40 வயது நடிகையுடன் ரொமான்ஸ் செய்தால் இந்நேரம் சமூக வலைத்தளம் என்ன நிலைக்கு வந்திருக்கும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த பதிவுகள் வைரலாகி வரும் நிலையில் தமிழ் ரசிகர்கள் நடிகர்களுக்கு ஆதரவாக நீங்களாம் இதை செய்யவில்லையா? 70 வயது தெலுங்கு நடிகர்கள் நடிகைகளுடன் செய்த ரொமான்ஸ் காட்சிகளை பதிவிட்டு சண்டை செய்து வருகின்றனர்.

தக் லைஃப் டிரெய்லருக்கே இந்த பிரச்னை என்றால் இன்னும் படம் ரிலீஸ் செய்தால் என்ன நிலை ஆகுமோ என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Next Story