லட்டு பற்றிய கமெண்ட்! கோபப்பட்ட பவன் கல்யாண்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கார்த்தி!..

தற்போது ஆந்திராவில் லட்டு பிரச்சனை தீப்பற்றி எரிகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் பெருமாளை தரிசிக்க திருப்பதிக்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர். அங்கு மிகவும் பிரபலமானது லட்டு. அந்த லட்டில் மாட்டின் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு போன்ற மாமிச பொருள்கள் கலக்கப்படுவதாக கூறி ஒட்டுமொத்த ஆந்திராவுமே அல்லோல பட்டு வருகின்றது.

பெரும் பாவம் செய்து விட்டார்கள் என திருப்பதி கோவிலில் இருந்த முன்னாள் அர்ச்சகர்கள் தங்களது வேதனையை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் மெய்யழகன் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவிற்காக ஹைதராபாத் சென்றிருந்தார் கார்த்தி.

ஒட்டுமொத்த பட குழுவும் அங்கு கூடியிருந்த நிலையில் மேடையில் கார்த்தியின் பிரபல காமெடி காட்சியான கண்ணா லட்டு தின்ன ஆசையா காமெடியின் புகைப்படத்தை திரையில் போட்டு காண்பித்து கார்த்தியிடம் லட்டு வேண்டுமா என தொகுப்பாளினி கேட்க அதற்கு கார்த்தி தெலுங்கில் 'லட்ட பத்தி இங்க பேசக்கூடாது. அது பெரும் சென்சிடிவ் விஷயம். எனக்கு லட்டே வேண்டாம் 'என கிண்டலாக கூறினார்.

உடனே துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாண் கார்த்தி கூறிய இந்த கருத்துக்கு எதிராக 'ஒரு நடிகராக அவர் இந்த மாதிரி பேசி இருக்கக் கூடாது .லட்டு சென்சிட்டிவ் விஷயம் என்று சொல்லும் அளவிற்கு எவ்வளவு தைரியம் .இதை அவர் கிண்டல் அடித்து கூறி இருக்கிறார் .சனாதனம் என்ற ஒன்று இருக்கிறது. அதையும் மீறி இப்படி பேசி இருக்கக் கூடாது' என கோபமாக அவருடைய எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார் பவன் கல்யாண்.





இதை அறிந்த கார்த்தி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பவன் கல்யாணை டேக் செய்து 'தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆழ்ந்த மரியாதையுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் .வெங்கடேச பெருமாளின் தாழ்மையான பக்தன் என்ற முறையில் எப்போதும் நம்முடைய மரபுகளை பின்பற்றி தான் நடந்து வருகிறேன்' எனக் கூறி தனது எக்ஸ் பக்கத்தில் ட்விட் போட்டிருக்கிறார் கார்த்திக்.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it