மெய்யழகன் படத்தில் கார்த்தி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா? ஆத்தாடி!..

Meiyyazhagan: கார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் மெய்யழகன் படத்தில் அவர் வாங்கிய சம்பளம் குறித்து ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பிரபல நடிகர் சிவகுமாரின் மகன் என்ற அந்தஸ்துடன் தமிழ் சினிமாவிற்குள் வந்தவர் கார்த்தி. இவர் சூர்யாவின் தம்பி. முதன் முறையாக மணிரத்னத்தின் உதவி இயக்குனராகதான் கார்த்தி கோலிவுட்டில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து அவருக்கு பருத்திவீரன் படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தது.

முதல் படமே மிகப்பெரிய ஹிட்டாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தொடர்ந்து லவ்வர் பாயாக வலம் வந்த கார்த்தி சில ஹிட் படங்களிலும் நடித்திருக்கிறார். கடைசியாக மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரில் நடித்து ஆச்சரியப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து, சில படங்களில் நடித்தாலும் அது பெரிய அளவில் ஹிட்டை கொடுக்கவில்லை. அதிலும் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஜப்பான் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது அரவிந்த்சாமியுடன் இணைந்து மெய்யழகன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

96 படத்தை இயக்கிய சி. பிரேம்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. நாளை செப்டம்பர் 27ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு நடிகர் கார்த்தி 15 முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. தற்போது நடிகர்கள் தங்களது சம்பளத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தி இருக்கின்றனர். ஆனால் சமீப காலமாக ஹிட் படங்களை கொடுக்காத கார்த்தி இதே சம்பளத்தில்தான் சில வருடங்களாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it