எவன்டா கிளப்பிவிட்டது!.. சும்மா இருங்கடா!.. அரண்மனை 5 அப்டேட் கொடுத்த குஷ்பு!..

by Murugan |
aranmanai
X

aranmanai

Aranmanai 5: தமிழ் சினிமாவில் மினிமம் பட்ஜெட்டில் தொடர்ந்து ஹிட் படங்களை இயக்கி வருபவர் சுந்தர் சி. காதல் காமெடி படங்களை இயக்கி வந்த அவர் பேய் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து அரண்மனை என்கிற பேய் படத்தை தயாரித்து, இயக்கி நடித்தார். 2014ம் வருடம் வெளியான இந்த படத்தில் ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, வினய் என பலரும் நடித்திருந்தனர்.

ஏற்கனவே கமல், ரஜினி, ஸ்ரீபிரியா நடித்து ஹிட் அடித்த பழைய படத்தின் கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து அரண்மனை படத்தை இயக்கியிருந்தார் சுந்தர் சி. இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே தொடர்ந்து அரண்மனை 2 எடுத்தார். அதிலும், சுந்தர் சி, திரிஷா, சித்தார்த், ஹன்சிகா என பலரும் நடித்திருந்தனர்.

இந்த படமும் ஹிட் அடிக்கவே அரண்மனை 3 எடுத்தார். அதில், சுந்தர் சி, ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படமும் மெகா ஹிட் அடித்தது. அதன்பின் அரண்மனை 4 வெளிவந்தது. அதில் சுந்தர் சி, தமன்னா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம்னும் சூப்பர் ஹிட் ஆனது.


ராகவா லாரன்ஸ் காஞ்சனா சீரியஸை தொடர்ந்து எடுப்பது போல் சுந்தர் சி அரண்மனை சீரியஸை எடுத்து வருகிறார். விரைவில் அவர் அரண்மனை 5 எடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ வடிவேலுவுடன் இணைந்து கேங்கர்ஸ் என்கிற படத்தில் நடிக்க துவங்கினார்.

அதோடு, மூக்குத்தி அம்மன் 2 படத்தையும் அடுத்து அவர் இயக்க திட்டமிட்டிருக்கிறார். இந்நிலையில்தா, சுந்தர் சி அரண்மனை 5 இயக்குவதாகவும், பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிட்டேட் நிறுவனம் அதை தயாரிக்கவுள்ளதாகவும் , ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கவுள்ளதாகவும் நேற்று செய்திகள் வெளியானது.

ஆனால், இது பொய்யான செய்தி என குஷ்பு மறுத்திருக்கிறார். இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும், இது தொடர்பாக பிஸ்னஸ் நடந்தால் அதற்கு அவர்களே பொறுப்பு எனவும் அரண்மனை 5 பற்றி சுந்தர் சி விரைவில் அறிவிப்பார். அதுவரை கேங்கர்ஸ் படத்திற்காக காத்திருங்கள் எனவும் பதிவிட்டிருக்கிறார்.

Next Story