கோலிவுட்டின் சூப்பர் ஹிட் மாஸ் நடிகர்களின் டாப் 5 படங்கள்… திருடப்பட்ட ஒரிஜினல் லிஸ்ட் இதுவா?

by Akhilan |
Kollywood
X

Kollywood: தமிழ் சினிமாவின் சூப்பர்ஹிட் படங்கள் என சொல்ப்படும் டாப் 5 படங்களில் முக்கிய இடம் பிடிக்கும் முன்னணி நடிகரின் படங்களின் லிஸ்ட்டை எடுத்தால் அதில் பெரும்பாலும் ஹாலிவுட் காப்பியாக தான் இருப்பது குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஹிஸ்ட்ரி ஆஃப் வயலென்ஸ்: ஒரு சின்ன ரெஸ்டாரண்ட்டில் வேலை பார்க்கும் ஹீரோ தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் சந்தோஷமாக வாழ்கிறார். ஒரு நாள் ரெஸ்டாரெண்டுக்கு இரண்டு கேங்ஸ்டர்கள் அங்குள்ள பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சிக்க, ஹீரோ அவர்களின் துப்பாக்கியை வைத்து இருவரையும் போட்டுத் தள்ளுகிறார்.

இந்த விஷயம் பரவ ஹீரோவை தேடி ரெளடிகள் வருகிறார்கள். அவர் தன்னுடைய அண்ணன் ரெளடியை பார்த்து கொலை செய்துவிட்டு தன்னுடைய வாழ்க்கைக்கு திரும்புகிறார். இப்ப தெரியுதா இந்த கோலிவுட் படத்தின் கதை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருந்த லியோ திரைப்படம்.

மெமன்டோ: கிரிஸ்டோஃபர் நோலனின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மெமன்டோ'. மனைவியை கொன்ற இருவர்களில் ஒருவனை கொன்றுவிடுகிறான் ஹீரோ லியனார்டு. ஆனால் மற்றொருவன் தப்பித்து விடுகிறான். நடந்த அடிதடியால் ஹீரோ அடித்து போடப்பட சில வினாடிகளுக்கு மேல் ஞாபகம் வைத்துக் கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்படுகிறான்.

இதனால் ஹீரோ தன்னை சுற்றி இருப்பவர்களை போட்டோக்கள் எடுத்து வைத்து கொள்கிறார். மேலும், உடல் எங்கும் எழுதி வைத்திருக்கும் டாட்டூகளையும் வைத்து தப்பித்த அந்த இன்னொருவனைக் கண்டுபிடித்துக் கொல்லுகிறான் என்பது தான் படம். இப்ப தெரியுதா என்ன படம் என்பது சூர்யா நடிப்பில் வெளியான கஜினி.

ப்ரூவ்ஸ்டர்ஸ் மில்லியன்ஸ்: ஹீரோ ஒரு பேஸ்பால் பிளேயர். திடீரென ஒரு பிரச்னையில் ஜெயிலுக்கு போனவரை ஒருவர் மீட்டு ஒரு இடத்துக்கு அழைத்து வந்து 30 நாட்களில் 30 மில்லியனை செலவு செய்தால் 300 மில்லியன் சொத்து கிடைக்கும் என்கிறார். அப்படி அவர் செய்ய தவறினால் ட்ரஸ்ட்டுக்கு சென்று அதில் பொறுப்பாக இருக்கும் நால்வருக்கு சென்று விடும்.

யாரிடமும் இப்படி ஒரு விஷயம் என்பதையும் சொல்லக்கூடாது. ஹீரோ உடனே விலை மிகுதியான ஹோட்டல் ரூமை வாடகைக்கு எடுக்கிறார். அடுத்து தேர்தலில் பணத்தை செலவழிக்க திட்டமிடுகிறார். கடைசி நிமிடத்தில் மிச்சமாக ஒரு தொகையை அவரை தோக்க வைக்க வில்லன்கள் பிளான் செய்ய அதையும் தன்னுடைய அசிஸ்டெண்ட்டுக்கு சம்பளமாக கொடுக்கிறார்.

இந்த திரைப்படத்தின் கதையை தான் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலமாக வெளியானது.

மிசர்ஸ் டவுட் ப்யர்: ஹீரோவுக்கு மூன்று பிள்ளைகள் ஆனால் மனைவிக்கும் அவருக்கும் பிரச்னை ஏற்பட்டு டைவர்ஸ் ஆகிவிடுகிறது. மனைவிக்கு குழந்தைகளின் கஸ்டடி சென்று விடுகிறது. அவர்களை பார்த்துக் கொள்ள நாயகி வேலைக்கு பெண்ணை தேடுகிறார். ஹீரோ பெண் போல விஷேசம் போட்டுக்கொண்டு அவர்களை பார்த்து கொள்ள வருகிறார்.

மனைவியை எப்படி சமாளித்தார் என்பது தான் படத்தின் கதை. இப்படம் கமல்ஹாசன், மீனா நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி திரைப்படமாக கோலிவுட்டில் உருவாகியது.

தி காட்பாதர்: மாபியாத்தலைவர் தனது கொள்கைகளால் தன்னிடம் உதவி கேட்க வருபவர் விருப்பங்களுக்கு ஏற்ப கொலை மற்றும் கொள்ளை ஆகிய காரியங்களில் ஈடுபடுகிறான். எதிரிகளினால் கொல்லப்படவே இவரது மகனான ஹீரோ அவர் பாதையில் எதிரிகளை பழிதீர்ப்பதே கதை. இப்படம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன்.

Next Story