ஊத்தி மூடிய ‘மாரீசன்’.. இரண்டாவது நாளில் படத்தின் வசூல் இவ்வளவுதானா?

mareesan
வடிவேலு ஃபகத் பாசில் நடிப்பில் கடந்த 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாரீசன். மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் மாரீசன் படத்தின் மூலம் இணைந்துள்ளனர். திரையில் வடிவேலுவையும் ஃபகத் பாசிலையும் ஒன்றாக பார்க்கும் போது அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் வெளியான முதல் நாளில் கலவையான விமர்சனத்தையே படம் சந்தித்தது.
அதே சமயம் மாரீசன் வெளியான அதே நாளில்தான் விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி படமும் வெளியானது. பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான அந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார்.இதுவரை விஜய்சேதுபதி நடித்த படங்களில் நித்யா மேனனுடனான காம்போதான் சூப்பர் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் மாமன்னன் திரைப்படத்தில் முதன் முறையாக படமுழுக்க வடிவேலு சிறந்த குணச்சித்திர கேரக்டரை வெளிப்படுத்தினார். காமெடி மட்டுமில்லாமல் என்னால் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்த முடியும் என வடிவேலு நிருபித்தார். அதனால் மாரீசன் திரைப்படத்திலும் எப்படிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் என்பதை பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக காத்திருந்தனர்.
ஏற்கெனவே ஃபகத் பாசில் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம். அதனால் இந்த ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு மாரீசன் படத்தின் பக்கம் திரும்பியது. ஆனால் படம் வெளியாகி எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இன்னொரு பக்கம் தலைவன் தலைவி படம் வசூலிலும் சரி விமர்சன ரீதியாகவும் சரி பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் மாரீசன் படத்தின் இரண்டாவது நாள் வசூல் நிலவரம் வெளியாகியிருக்கிறது.

mareesan
இரண்டாவது நாளில் மாரீசன் படத்தின் வசூல் 4 கோடி அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் தலைவன் தலைவி படத்தின் வசூல் 11 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இனி வரும் நாள்களில் இன்னும் இந்தப் படத்தின் வசூல் அதிகரிக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.